facebook-round

img

ரத்தம் உறையும் குளிரிலும், சித்தம் உறையாத விவசாயிகளின் போராட்டம் - கவிஞர் வைரமுத்து

ரத்தம் உறையும் குளிரிலும் சித்தம் உறையாத விவசாயிகளின் போராட்டம். என்று விவசாயிகளின் போராட்டம் குறித்து கவிஞர் வைரமுத்து டிவிட் செய்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் தில்லியில் விவசாயிகள் 13 நாட்களாக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  மத்திய அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையில் தோல்வி ஏற்பட்டதையடுத்து விவசாய சங்கங்கள் இன்று (டிச.8) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று நாடு முழுவதும் கடைகளை அடைத்தும், போராட்டங்கள் நடத்தியும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில்,
ரத்தம் உறையும் குளிரிலும் 
சித்தம் உறையாத
விவசாயிகளின் போராட்டத்தைக்
கண்டங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன;
அதை நீளவிடக்கூடாது.
இன்று அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள் திறக்கும்போதே மத்திய அரசும்
மனம் திறக்க வேண்டுமென்று
மக்கள் விரும்புகிறார்கள்.
என்று பதிவிட்டிருந்தார்.

;