#இந்திய_கம்யூனிஸ்ட்_இயக்கம் - 1
தோழர் முசாபர் அகமது.
1918 முதல் 1973 வரையில் 55 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகவே வாழ்ந்தவர். பிரிட்டிஷாரால் புனையப்பட்ட மீரட் சதி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர். டார்ஜிலிங், பர்துவான், ஃபரித்பூர், நைனி, மித்னாபூர் உள்ளிட்டு நாட்டின் பல சிறைகளில் பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டவர். "காகா பாபு" என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர். கணசக்தி உள்ளிட்ட ஏராளமான கட்சி பத்திரிகைகளை துவக்கியதில் மிக முக்கிய பணிகளை மேற்கொண்டவர்.
தோழர் அமீர் ஹைதர் கான்
தனது ஆறு வயதிலேயே தந்தையை இழந்து, தனது பதினான்கு வயதிலேயே சர்வதேச கப்பல்களில் ஒரு தொழிலாளியாக பணிக்கு சேர்ந்து அதன் மூலம் கிடைத்த தொடர்புகளின் மூலம் கட்சிக்கு வந்தவர். அதற்கு பிறகு தான் உயர்கல்வியை கற்றார். மீரட் சதி வழக்கில் காவல்துறை இவரை தேடிக் கொண்டிருந்த காலத்தில் சங்கர் எனும் பெயரில் தென்னிந்தியா முழுவதும் சுற்றி கட்சி பணிகளை மேற்கொண்டார். அவர் மூலம் கட்சிக்கு வந்தவர் தான் தோழர் பி.சுந்தரய்யா. இறுதி வரையிலும் ஒரு போராளியாகவே வாழ்ந்து மறைந்த இவர் தன்னை ஒரு ஃபக்கீர் (நாடற்றவர்) என்றே அழைத்துக் கொண்டார். தனது இறுதி நாட்களில் பரம்பரை நிலத்தை விற்ற பணத்தில் சிறுவர் மற்றும் பெண்களுக்காக ஒரு அறிவியல் ஆய்வக பள்ளியை உருவாக்கி வளர்த்தார்.
இத்தகைய மகத்தான தலைவர்களால் உருவாக்கப்பட்டதே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் ஆகும்.
பாலக்காட்டில் நடைபெற்ற கட்சியின் 4 வது மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் பெற்ற சிறை தண்டனையின் காலம் 1344 ஆண்டுகள்.. தலைமறைவு வாழ்க்கை 1021 ஆண்டுகள் என மொத்தம் 2365 வருடங்கள்..
அதாவது மாநாட்டில் பங்கேற்ற ஒவ்வொரு பிரதிநிதியும் தலா
2121 நாட்கள் சிறையிலும் தலைமறைவாகவும் தங்கள் வாழ்க்கையை கழித்திருக்கிறார்கள்..
தியாகம் எனும் சொல்லுக்கு
அடையாளம் கம்யூனிஸ்டுகள்...