facebook-round

img

சுயசார்பு தம்பட்டமும் அடங்கா அன்னிய மோகமும் !

மத்திய அமைச்சரவை நேற்றையதினம் டைரக்ட் டூ ஹோம்(DTH) சேவைகளில் இனி 100% அந்நிய நேரடி மூலதனம் வரலாமென்று முடிவெடுத்திருக்கிறது.அதாவது இனி நம் வீடுகளுக்கு தொலைக்காட்சிகளை கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பில் முழுக்க முழுக்க அந்நிய நிறுவனம் ஈடுபடலாம் என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரையிலும் இது 49 சதவீதமாகவே இருந்தது .அதாவது இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு நிறுவனம்தான் அதை மேலாண்மை செய்யும் என்கிற நிலைமையை மாற்றி 100% அந்நிய கம்பெனிகள் இந்த சேவையில் ஈடுபட போகிறார்களாம்.

அதிலும்கூட அவர்களுக்கான உரிமை காலம்(Licence Period) 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. மேலும் லைசென்ஸ் கட்டணம் இனிமேல் குறைக்கப்படுமாம். அதாவது இதுவரையிலும் இந்திய நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபடும் போது கட்ட வேண்டிய அல்லது கட்டிக் கொண்டிருக்க கூடிய கட்டணத்தை விட குறைவான கட்டணத்தை முழுக்க முழுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் ஆக இருக்கக்கூடியவர்கள் கட்டினால் போதும்.

இதில் நரேந்திர மோடி தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த 'ஆத்மநிர்பார்'அதாவது சுயசார்பு எங்கே இருக்கிறது?

முதலாவதாக இந்த துறையில் இப்போது என்ன தேவைக்காக 100% அந்நிய மூலதனம் அனுமதிக்கப்படுகிறது?

இதில் புதிய தொழில்நுட்பம் ஏதேனும் வரப்போகிறதா? வேலைவாய்ப்பு அதிகரிக்க போகிறதா?

அல்லது மக்களுக்கு அதாவது தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு கட்டணம் குறைய போகிறதா?

என்ன நோக்கத்தில் இருந்து இதை செய்கிறார்கள்?

கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில்கூட பெட்ரோல் டீசல் விலைகளை பொழுது விடிய தவறினாலும் விலை ஏறுவது தவறாமல் பார்த்துக்கொண்டது மத்தியமோடி அரசு.ஏன் உயர்வென்று கேட்டால் அரசுக்கு பணம் வேண்டுமென்றார்கள்.வேலைக்கு போகவில்லை. வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறது. வருமானம் குறைந்து இருக்கிறது என்கிற நிலையிலும் கூட சமையல் எரிவாயு விலை ஒரே மாதத்தில் 100 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த பின்னணியில்தான் இப்படி ஒரு முடிவை மத்திய அமைச்சரவை எடுத்திருக்கிறது.என்ன குப்பை நியாயம் இதில் இருக்கிறது.

அன்னிய நாட்டு படை ஒரு நாட்டு மக்களை தேடித்தேடி வேட்டையாடுவது போல அன்னிய கம்பெனிகளுக்கு நரேந்திர மோடியும் சங்பரிவாரும் இந்திய மக்களை ஒட்டச் சுரண்டுவதற்கும் ஓட ஓட விரட்டி சுரண்டுவதற்கும் அடியாளாக ஆட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நரேந்திர மோடிக்கு குறைந்தபட்ச நேர்மை இருந்தால் ஆத்மநிர்பார் என்றெல்லாம் கூவுவதை விட்டுவிட்டு ஆமாம்! நான் கார்ப்பரேட்டுகளின் சேவக்கு தான்; ஆமாம்! நான் பன்னாட்டு முதலாளிகளின் அடியாள் தான் என்று பிரகடனப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Kanagaraj Karuppaiah

;