facebook-round

img

உச்சநீதிமன்றம் தன்மீதான நம்பிக்கையை மீட்கும் பொருட்டேனும்....

2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் மார்ச்சு மாதம் ஒன்றாம் தேதி கொலையாளி கும்பல் ஒன்று அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு செல்கிறது. அந்த கிராமம் முழுவதும் இஸ்லாமியர்கள் வசிக்கிற பகுதி. முதலில் வீடுகளின் மீது ஆயுதங்களைக் கொண்டு தாக்குகிறார்கள். சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன. அதன் பிறகு ஏழு முஸ்லீம் வீடுகளைச் சுற்றி வளைத்துக்கொண்டு அதற்குத் தீ மூட்டுகிறார்கள்.பதறித்துடித்த மக்கள் அருகில் இருக்கிற மூன்று மாடி கட்டிடத்திற்குள் தஞ்சம் புகுந்து கொண்டார்கள். உடனடியாக அந்த கும்பல் அந்த மூன்று மாடி கட்டிடத்தையும் தீ வைத்துக் கொளுத்துகிறது.
23 உயிர்கள் துள்ளத் துடிக்க தீயில் உயிரோடு எரிந்து கொள்ளப்படுகிறார்கள். அந்த வழக்கில் தான் 2018 ஆம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்றம் 19பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறது. இந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதன்மீது கொலையாளிகள் தண்டனையைக் குறைக்க வேண்டும் ரத்து செய்ய வேண்டும் என்று பலவாறாக நீதிமன்றம் சென்று இருக்கிறார்கள். இந்த வழக்கில்தான் நேற்றைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இவர்களில் 14 பேருக்கு இடைக்கால பிணை வழங்கி வழங்கியிருக்கிறது அதோடு மட்டுமின்றி இவர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் ஆன்மீக பணி மற்றும் சமூக சேவை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 44 பேர் கொல்லப்பட்ட கீழ்வெண்மணி வழக்கிலும் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். அதற்கு சற்றும் குறையாத வகையில் எண்ணிக்கை வேண்டுமானால் பாதியாக இருக்கலாம் ஒரு 70 ஆண்டுகள் தாண்டி வந்து விட்ட பிறகும் கூட உச்ச நீதிமன்றம் இப்படித்தான் 'நீதி' வழங்கும் என்றால் நீதிமன்றங்களின் மீது யாருக்கு நம்பிக்கை இருக்கும். நீதிமன்றம் என்பது காரணப் பெயராக இருக்க வேண்டும் இடுகுறிப் பெயராக இருக்கக் கூடாது.
உச்ச நீதிமன்றம் தன்னுடைய இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கொல்லப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கும் பொருட்டுகூட அல்ல; நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் பொருட்டு உச்சநீதிமன்றம் இதைச் செய்வது மிக மிக அவசியம்

-Kanagaraj Karuppaiah

;