facebook-round

img

கோயபல்சின் குருநாதர் மோடி!

மோடி வழக்கமாக பொய் பேசுவார் என்பது தெரியும். ஆனால் குஜராத்திற்கு சென்றுவிட்டால் பொய்களின் தன்மையும், எண்ணிக்கையும் தாறுமாறாக உயர்ந்துவிடும். இந்த முறை குஜராத்திற்கு சென்ற அவர், தான் பொறுப்பேற்றபோது இந்திய பொருளாதாரம் உலக அளவில் 10வது இடத்தில் இருந்ததாகவும், தற்போது அதை முட்டித்தூக்கி 5வது இடத்திற்கு கொண்டு வந்ததாகவும் அளந்துவிட்டிருக்கிறார்.

2011 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் உலக அளவில் 3வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்து விட்டதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவித்திருந்தது. அதற்கான விபரங்களையும் அது வெளியிட்டிருந்தது. 2011 ஆம் ஆண்டு 3ம் இடத்திலிருந்த இந்திய பொருளாதாரம் எப்போது 10வது இடத்திற்கு போனது என்று மோடி விளக்கமேதும் சொல்லவில்லை. விளக்கம் அளித்திடும் வழக்கம் ஏதும் அவருக்கு கிடையாது.

3வது இடத்திலிருந்த இந்திய பொருளாதாரத்தை 5வது இடத்திற்கு தள்ளிவிட்டுவிட்டு அது 10வது இடத்தில் இருந்தது என்று சொல்வதன் மூலம் இவருடைய திறமையால் 5வது இடத்திற்கு கொண்டு வந்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.

இப்போது 5வது இடம் என்பது உண்மை. ஆனால் 10வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு முன்னேறவில்லை. மாறாக, 3வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

ஒரு பொய்யின் மூலம் தனது தோல்வியை மிகப் பெரிய வெற்றி போல காட்டுவதில் சங் பரிவார் கரைதேர்ந்தவர்கள். உண்மையில் இவர்கள் கோயபல்சின் குருமார்கள்.