facebook-round

img

உடன்படுகிறோம் சங்கிகளே....

உடன்படுகிறோம் சங்கிகளே....

படிக்க வேண்டிய வயதில்
ஒழுங்காய் படிக்க வேண்டும்...

ஒரே ஒரு திருத்தம்...
இந்த பால பாடத்தை முதலில்
கற்றுக் கொடுங்கள் உமது மாணவர்களுக்கு...

ஒழுங்காய் படித்ததால் தான்...
உயரும் குண்டாந்தடிக்கு மிரளாமல்,
ஒற்றை விரல் உயர்த்தி
'உங்கள் அப்பன் வீட்டு சொத்தா இந்த தேசம்....'
என கர்ஜிக்க முடிகிறது
எமது மாணவர்களால்...

ஒழுங்காய் படித்ததால் தான்...
வன்முறையைத் தூண்டாமல்,
'ஆஸாதி.... ஆஸாதி....'
என விண்ணதிர முழங்க முடிகிறது
எமது மாணவர்களால்...

ஒழுங்காய் படித்ததால் தான்...
காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு அஞ்சாமல்,
உடலையே ஆயுதமாக்கி சமர்செய்ய முடிகிறது
எமது மாணவர்களால்...

ஒழுங்காய் படித்ததால் தான்...
முகம்மறைத்து தாக்கிய கோழைகளின் முன்,
பிளக்கப்பட்ட மண்டையோடும்,
உடைக்கப்பட்ட கையோடும்,
அடுத்தநாளே போராட்டக்களம் புகமுடிகிறது
எமது மாணவர்களால்...

படிக்க வேண்டிய வயதில்
ஒழுங்காய் படிக்க கற்றுக் கொள்ளுங்கள்
எமது மாணவர்களிடமிருந்து...

- Premalatha Sriramulu