election2021

img

திரைக்கலைஞர் ரோகிணி பிரச்சாரத்தில் இராஜன் செல்லப்பாவின் கும்பல் தகராறு.... கண்டுகொள்ளாத மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்... மாநிலஅதிகாரிக்கு சிபிஎம் புகார்....

திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றத்தில் பணப்பட்டுவாடா செய்துவரும் அதிமுக வேட்பாளர்இராஜன் செல்லப்பா, அவருக்கு உதவிசெய்பவர்கள் மீது மாவட்டத் தேர்தல் அலுவலர், வருமான வரித்துறை ரெய்டு நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

சனிக்கிழமையன்று பகல் ஒரு மணி வரை எந்த நடவடிக்கையையும் மாவட்டத் தேர்தல் அலுவலர் த.அன்பழகன் எடுக்கவில்லை. தொகுதிக்குட்பட்ட நிலையூர் கிராமத்தில் எஸ்.பொன்னுத்தாயை ஆதரித்து திரைப்படக் கலைஞர் ரோகிணி பிரச்சாரம் செய்தார்.அப்போது  அங்கு தனக்கான ஆதரவாளர்களுடன் வி.வி.இராஜன் செல்லப்பா வந்தார். அப்போது, ரோகிணி அதிமுகவை கருத்தியல் ரீதியாக விமர்சித்தார். இதைப் பொறுக்காத அதிமுகவினர் பேச்சை நிறுத்துமாறு கூச்சலிட்டு ரகளை செய்தனர். பிரச்சார வாகனத்தை தடுத்துத் தாக்கினர்.

அங்கிருந்த காவல் துறையினர் தகராறு செய்தவர்களைத்  தடுக்காமல் ரோகிணியின் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினர். இதனால் ரோகிணி தனது பிரச்சாரத்தைமுழுமையாக மேற்கொள்ள இயலவில்லை.இராஜன் செல்லப்பா பதவி சுகத்தை அனுபவிக்க வாக்காளர்களுக்கு ஐந்து வருடங்களுக்கும் சேர்த்து ரூ.500 மட்டும் வெகுமதி அளித்து வருகிறார். நாளொன்றுக்கு இதன் மதிப்பு ரூ.3.65 என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாகுவிற்கு புகார்அளிக்கப்பட்டுள்ளது. புகாரில், ரோகிணியின் பிரச்சாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு இராஜன் செல்லப்பா எப்படி வந்தார்? ஒரே நேரத்தில் எப்படி இரு வேட்பாளர்களும் அனுமதிக்கப்பட்டனர்.? இதை விசாரணைக்குட்படுத்த வேண்டும். அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லையென உறுதியாக அறிய வருகிறோம். அவர் வேண்டுமென்றே பதற்றத்தை உருவாக்கியிருக்கிறார். தேர்தல் விதிகளை  மீறியுள்ள அதிமுக வேட்பாளர் வி.வி.இராஜன் செல்லப்பா மீது உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டுமென தொகுதி தேர்தல் பொறுப்பாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

;