election2021

img

சட்டமன்றத் தேர்தல் ஒரு ஜனநாயகப் போர்.... வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின் பேட்டி.....

சென்னை:
தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற உள்ள தேர்தல் ஒரு ஜனநாயகப் போர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வர்ணித்துள்ளார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 173 தொகுதிகளில் திமுகவும், 61தொகுதிகளில் தோழமைக் கட்சிகளும்போட்டியிடுகின்றன. தோழமைக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிந்த நிலையில், திமுக போட்டியிடும் இடங்களுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று (மார்ச் 12) அறிவாலயத்தில் அறிவித்தார்.

அதன்படி, சென்னை கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் திமுக தலைவர் ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க உள்ளார். திமுகபொதுச் செயலாளர் துரைமுருகன் இம்முறையும் தனது சொந்த தொகுதியான காட்பாடியிலேயே போட்டியிடுகிறார். முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு திருச்சி மேற்கு தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியில் முதன் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் களம் காண்கிறார்.வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதிமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல; தேர்தல் கால கூட்டணிஅல்ல; கொள்கைக் கூட்டணி. கொள்கைநட்பால் உருவான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை முடிந்துவிட்டது. திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேலும், மதிமுக, கொமதேக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி (2ல் ஒரு இடம்), பார்வர்டு பிளாக், ஆதித்தமிழர் பேரவை,மக்கள் விடுதலை கட்சி ஆகியவை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. இதன்படி உதய சூரியன்சின்னம் 187 தொகுதிகளில் களம் காண்கிறது.10 வருடமாக பாழ்பட்டு நிற்கும் தமிழகத்தின் புதிய விடியல் காண இந்த தேர்தல் களம் காண்கிறோம். தற்போது அறிவிக்கப்பட்டுள் ளது வேட்பாளர் பட்டியல் அல்ல; வெற்றி பெறுவோர் பட்டியல்.

1971ஆம் ஆண்டு 184 இடங்களில்திமுக வெற்றி பெற்றது. அந்தசாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. அந்தச் சாதனையை திமுக-வே முறியடிக்கும். கழக ஆட்சி அமைப்போம் என்ற சிந்தனையோடு, நடைபெற உள்ள ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலில் ஊடகங்கள் நெறிமுறைகளோடு செயல்பட்டு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் அறிக்கை
செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,திமுக தேர்தல் அறிக்கை சனிக்கிழமை(மார்ச் 13) மாலைக்குள் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளவர் சாதாரணமானவராக இருக்கலாம். ஆனால், வெற்றி பெறக்கூடிய வேட்பாளர். கூட்டணியில் கட்சிகளின் எண்ணிக்கை அதிகம். ஒரே தொகுதியை பல கட்சிகேட்டன. அவர்களிடம் பேசி உடன்பாடு உருவாக்க காலதாமதமானது. சுமூகமாக, பிரச்சனையின்றி முடிந்துள்ளது என்றும் கூறினார்.

வேட்புமனு
திமுக வேட்பாளர்கள் அவரவர் வசதிக்கேற்ப வேட்புமனு தாக்கல் செய்வார்கள். கொளத்தூர் தொகுதியில் 15 ஆம் தேதி வேட்புமனு தாக்கல்செய்து, அன்றைய தினமே பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

;