புதுதில்லி:
மேற்கு வங்கத்தில் வாக்காளர் களை சுட்டுக்கொன்றது மிகக்கொடூரமான செயல் என்று சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள் ளார்.மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 10 அன்று நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற் றது.
கூச்பிகார் மற்றும் அலிபுர்துவார் மாவட்டங்களிலும் தெற்கு 24 பர்கானாவில் ஒரு பகுதி, ஹவுரா, ஹூக்ளிஉட்பட மொத்தம் 44 இடங்களுக்குஏப்ரல் 10 அன்று தேர்தல் நடைபெற்றது. மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ, மாநில அமைச்சர்கள் பார்த்தா சாட்டர்ஜி, அருப் பிஸ்வாஸ் உட்பட 373 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 290 மூன்றாம் பாலினத்தவர் உட்பட 1 கோடியே 15 லட்சம்பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.இதில் துணை பாதுகாப்புப் படையினரால் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கூச் பிகார் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எனினும் இந்த சம்பவத்தில் ஐந்துபேர் கொல்லப்பட்டதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறுகிறது.சம்பவம் நடந்த வாக்குச்சாவடியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், சம்பவம் குறித்து அறிக்கை கோரி இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.
சீத்தாராம் யெச்சூரி கண்டனம்
இந்தக் கொடிய சம்பவம் குறித்து,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: “வாக்காளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைக் கொன்றிருப்பது மிகவும் கொடூரமான செயலாகும். ஒட்டுமொத்தத்தில் கண்டிக் கத்தக்கதாகும். தேர்தல் ஆணையம் நீதித்துறையின் மேற்பார்வையுடன் உயர்மட்ட அளவில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குற்றமிழைத்தவர்களைத் தண்டித்திட வேண்டும். பாதிப்புக்கு உள்ளாகித்துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து மத்தியப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், உள்ளூர் மக்கள் மத்தியப்படையினர் மீது தாக்குதல் நடத்தமுயன்றனர். அவர்களின் துப்பாக்கியைப் பிடுங்க முயன்றனர். இதனால் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர். மத்தியப் படை வீரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்துதேர்தல் ஆணையம்தான் முடிவுஎடுக்க வேண்டும். முதல்கட்டத் தகவலின்படி தற்காப்புக்காகவே துப் பாக்கியைப் பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்தார்.துப்பாக்கிச்சூட்டில் கொல்லப் பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் 4 பேரின் உடல்களும் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டன.
துப்பாக்கிச்சூடு குறித்து சிஆர்பிஎப் தரப்பில் வெளியிடப் பட்டுள்ள செய்தியில், கூச் பெஹாரின்சிதல்குச்சி சட்டசபை தொகுதிக்குஉட்பட்ட ஜெர்பட்கி வாக்குச்சாவடிக்கு வெளியே 4 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த வாக்குச்சாவடியில் சிஆர்பிஎப் வீரர்கள் பணி அமர்த்தப்படவில்லை. மேலும், இதில் சிஆர்பிஎப் வீரர்கள்ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.வரிசையில் நின்ற வாக்காளர்களை சி.ஆர்.பி.எப். சுட்டுக்கொன் றுள்ளது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.