election2021

img

காயம்பட்டதாக கூறிய காலை நன்றாக ஆட்டி அசைத்த மம்தா? 30 விநாடி வீடியோ வெளியிட்டு பாஜக விமர்சனம்...

கொல்கத்தா:
மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி கடந்த மார்ச் 10 அன்று  நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து திரும்பும் போது, மர்ம நபர்கள் தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் கீழே தள்ளிவிட்டதில், இடதுகால், இடுப்பு, தோள்பட்டை, கழுத்து ஆகியவற்றில் காயம் ஏற்பட்டதாகவும் கூறி மருத்துவமனையில் சேர்ந்தார்.

பின்னர் சிகிச்சைக்குப் பிறகு,சக்கர நாற்காலியில் வந்த அவர்,தொடர்ந்து அந்தக் கோலத்திலேயே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தன்மீது மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்துவதற்காகவே, காலில் கட்டுப்போட்டு மம்தா நாடகம் ஆடுகிறார் என்று அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் பிரணாய் ராய் 30விநாடிகள் ஓடும் வீடியோ காட்சித் தொகுப்பு ஒன்றின் மூலம், மம்தா அவரது காயம் அடைந்த காலை நன்றாக முன்னும் பின்னும் நகர்த் தும் காட்சியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தேர்தலில் மக்களின் ஆதரவை பெறுவதற்காக மம்தா நாடகமாடுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்என்று பிரணாய் ராய் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத் தளங்களிலும் வைரலாகியுள்ளது.ஆனால், பாஜகவின் இந்த வீடியோவுக்கு திரிணாமுல் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக வெளியிட்ட வீடியோ உண்மை என்றால்,“மம்தாவுக்கு சிகிச்சை அளித்த புகழ்பெற்ற டாக்டர்கள் பொய் சொல்கிறார்களா?” என்று கேள்விஎழுப்பியுள்ள சின்ஹா, “இப்படிப் பட்ட பொய்களை பாஜகவினரால் மட்டுமே கூற முடியும்” என்றும் கொந் தளித்துள்ளார்.