தேனி:
போடியில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் 500-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவியத் தொடங்கியதைத் தொடர்ந்து திமுகவின் வேட்பாளர்தங்கத்தமிழ்செல்வன் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார்.
போடி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கதமிழ்ச்செல்வன் போடி நகர் பகுதியில் உள்ள முக்கியஸ்தர்களை இருசக்கர வாகனத்தில் சென்று சந்தித்து வாக்குச் சேகரித்து வருகிறார்.அவர் வாக்குச்சேகரிக்கும் நேரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் பகுதிக்கு சென்ற தங்கத்தமிழ் செல்வன் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனத்தில் 500-க்கும் மேற்பட்ட நபர்கள் கூடியிருந்தது கண்டு தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து போடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட நான்குபறக்கும் படையினர் துணை முதல்வர் அலுவலகம் முன்பாக வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.துணை முதல்வரின் 2345 என்று பதிவுள்ள வாகனத்தையும் தேர்தல் பறக்கும்படையினர் பரிசோதனை செய்தனர். மேலும் திமுகவினர் துணை முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தகவல் வந்ததையடுத்து போடி நகர் பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.