election2021

img

திமுக கூட்டணியை ஆதரித்து கி.வீரமணி தேர்தல் பரப்புரை..

சென்னை:
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துத் திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணி தேர்தல் பரப்புரையைத் துவக்கினார்.திமுக தலைமையிலான மதச்சார்பற்றமுற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அவரது பிரச்சாரப்பயணம் விவரம் வருமாறு:

வியாழக்கிழமை (மார்ச் 18) அன்று மாலை 5.30 மணிக்குநன்னிலம் தொகுதிக்குட்பட்ட குடவாசல் பகுதியில் வேட்பாளர் எஸ்.ஜோதிராமனை ஆதரித்தும், மாலை 6.30 மணிக்குதிருவாரூர் தொகுதியில் வேட்பாளர் பூண்டி கே.கலைவாணனை ஆதரித்தும், இரவு 7.30 மணிக்கு மன்னார்குடி தொகுதிக்குட்பட்ட நீடாமங்கலம் பகுதியில் வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜாவை ஆதரித்தும் தேர்தல் பரப்புரை மேற் கொண்டார்.மார்ச் 19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்குப் பேராவூரணியில் வேட்பாளர் என்.அசோக்குமாரை ஆதரித்தும், மாலை 6.30 மணிக்குப் பட்டுக் கோட்டையில் வேட்பாளர் கா.அண்ணாதுரையை ஆதரித்தும், இரவு 7.30 மணிக்கு ஒரத்தநாடு பகுதியில் வேட்பாளர் எம்.ராமச்சந்திரனை ஆதரித்தும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.20 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்குத்திருக்காட்டுப்பள்ளியில் வேட்பாளர் துரைசந்திரசேகரனை ஆதரித்தும், மாலை 6.30 மணிக்கு அரியலூரில் வேட்பாளர் சின்னப்பாவை ஆதரித்தும், இரவு 7.30 மணிக்குச் செந்துறையில் வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரை ஆதரித்தும் பிரச்சாரம் செய்கிறார்.22 ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்குலால்குடி தொகுதியில் வேட்பாளர் அ.சவுந்தரபாண்டியனை ஆதரித்தும், மாலை 6.30 மணிக்கு மண்ணச்சநல்லூர்தொகுதியில் வேட்பாளர் சீ.கதிரவனை ஆதரித்தும், இரவு 7.30 மணிக்குத் துறையூர் தொகுதியில் வேட்பாளர்செ.ஸ்டாலின் குமாரை ஆதரித்தும் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.இந்தத் தகவலைத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.