தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் என தூத்துக்குடி பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கீதாஜீவன், திருச்செந்தூா் தொகுதியில் போட்டியிடும் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், விளாத்திக்குளம் தொகுதியில் போட்டியிடும் ஜீ.வி. மார்க்கண்டேயன், ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் எம்.சி. சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஊா்வசி எஸ். அமிர்தராஜ், கோவில்பட்டி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் கே.சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் சிதம்பரநகா் பேருந்துநிறுத்தம் எதிரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.
இந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் எனக்கு தெரியாது; டிவியில்பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என கூறியவர் எடப்பாடி பழனிசாமி. அவர் பதவியில் நீடிக்கலாமா? துப்பாக்கிச் சூட்டிற்குகாரணமானவர்கள் தண்டிக்கப்பட வில்லை. நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதின் விளைவாக வழக்குசிபிஐ விசாரணைக்கு மாற்றப் பட்டது. ஆனால் மத்திய பாஜக அரசுமூலம் சிபிஐ விசாரணை முடக்கப் பட்டுள்ளது.மாநில அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாக விசாரணைதான் நடைபெற்றுவருகிறது. இதுவரை எந்த அறிக்கை யும் தாக்கல் செய்யப்படவில்லை. இது மக்களை ஏமாற்றும் செய லாகும்.
இதேபோன்று சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை கடை அடைக்க மறுத்தார்கள் என்று கூறி காவல்நிலையம் அழைத்து சென்று அடித்து சித்ரவதை செய்து கொலை செய்த சம்பவம் நெஞ்சை பிளப்பதாக இருந்தது. ஆனால் இந்த சம்பவத்தில் முதல்வர் பழனிச்சாமி, உடல் நிலை சரியில்லாததால் வியாபாரிகள் உயிரிழந்துவிட்டனர் என்று கூறினார்.இந்த மாவட்டத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ இது லாக் அப் டெத் இல்லை என்று கூசாமல் பொய் சொன்னார். மருத்துவமனையில் இறந்தனர் என்று அறிவுக் கொழுந்து போல் கூறினார். இந்த ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு சீர் குலைவிற்கு இதெல்லாம் உதாரணம்தான். இந்த படுகொலைகளுக்கு நீதி கிடைத்திடஏப்ரல் 6 ஆம்தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்றகூட்டணி வேட்பாளர்களை அமோக வெற்றிபெற செய்ய வேண்டும். திமுகஆட்சிக்கு வந்தவுடன் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வேலைவழங்கப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்துவாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
உப்பளத் தொழிலாளர்க்கு தனிநலவாரியம்
கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுகதனது சாதனைகளை சொல்லி வாக்குகேட்க முடியவில்லை. ஆனால் திமுகஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில்செய்த திட்டங்களை கூறி நாங்கள்வாக்கு கேட்கிறோம். தூத்துக்குடி நகரத்தின் குடிநீர் தந்தை என்று அழைக்கப்படும் குரூஸ் பர்னாந்திற்கு நினைவுமண்டபம் கட்டப்படும், மீனவர்களுக்கு மானியங்கள் உயர்த்தி வழங்கப்படும், உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்து மழைக் கால நிவாரணம் வழங்கப்படும். தூத்துக்குடி டபுள்யூ.ஜி.சி ரோட்டிற்கு வ.உ.சி சாலை என பெயர் சூட்டப்படும்என்றார். இதேபோல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.