election2021

img

திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி மீது தாக்குதல் முயற்சி.... அமைச்சர் வேலுமணி சகோதரர் மீது புகார்....

கோயம்புத்தூர்:
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  சகோதரர் அன்பரசன், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளரான வடவள்ளி சந்திரசேகர் ஆகியோர் தகாத வார்த்தைகளில் பேசியதாகவும்,  50க்கும் மேற்பட்ட அதிமுக, பாஜகவினர் தாக்க முற்பட்டதாகவும் தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்டஆட்சியரிடம் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுகவேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிகூறுகையில், நான் போட்டியிடும்தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி களை காலை 7 மணி முதல்  பார்வை யிட்டேன். அதன் ஒருபகுதியாக செல்வபுரம் பகுதியில் உள்ள 127, 127ஏ ஆகிய வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு வெளியே வந்தபோது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளரான வடவள்ளி சந்திரசேகர் உள்ளிட்ட 5 பேர் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், பெயர் தெரிந்த, அடையாளம் தெரியாத அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த 50 பேர் தாக்க முற்பட்டனர், அதிலிருந்து தப்பித்து காரில் ஏறியதும், அங்கு பணியிலிருந்த காவல்துறையினரின் லத்தியை பிடுங்கி காரை தாக்கினர் என்றார். மேலும், அப்போது,அங்கிருந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், காவல் துணை ஆணையர் ஸ்டாலின் வந்து தான் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். அதனால் அந்த இரு காவல் அதிகாரிகளை மாற்ற வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய வேண்டும் என புகார்  அளித்துள்ளதாக தெரிவித்தார். 

இந்த சம்பவத்தால் சுமார் ஒன்றரை மணி நேரம்  வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டதால், கூடுதலாக ஒரு மணி நேரம்கால அவகாசம் அளித்து பொதுமக்கள்அச்சமின்றி வாக்களிக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும்,தொண்டாமுத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் அமைச்சருடன் 7 ஆண்டுகள் இருந்ததால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதால் தனது தொடர் புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும், இந்த சம்பவம் தொடர்பாக, ஐ.ஜி., காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் புகார் அளிக்க உள்ளதாக கூறினார். மேலும், தேர்தல் தோல்வி பயத்தால்அதிமுகவினர்  இவ்வாறு செய்வதாக வும் சிவசேனாபதி குற்றம் சாட்டினார்.