election2021

img

புதுவையில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஒப்பந்தம்....

சென்னை:
புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் தொகுதி ஒப்பந்தம்கையெழுத்தானது. அதன்படி காங்கிரஸ் 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுகவுக்கு 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தோழமை கட்சிகளுக்கு இரண்டு தொகுதியும் ஒதுக்கியுள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள், தமிழக மற்றும் புதுச்சேரி பிரதிநிதிகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.