election2021

img

7 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தும் ஊடுருவல்காரர்களை தடுக்காதது ஏன்? அசாம் தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வி...

கவுகாத்தி:
அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் களம், வேகமாக பாஜகவுக்கு எதிராகமாறி வருகிறது. 

அசாம் கணபரிஷத் கட்சி மட்டுமேபாஜக-வுடன் இருக்கும் நிலையில், இடதுசாரிகள், போடோலாந்து மக்கள்முன்னணி, பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட 10 கட்சிகள்அடங்கிய கூட்டணியை காங்கிரஸ் அமைத்துள்ளது. இதன் வீச்சு தேர்தல் களத்திலும் பெரிதாக எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேயிலைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரப் போராட்டம் போன்றவை பாஜககூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வழக்கம்போல பிரித்தாளும் அரசியலைக் கையிலெடுத்துள்ள பாஜக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்குவந்தால் அசாமில் வங்கதேச முஸ்லிம் களின் ஊடுருவல் அதிகமாகி விடும் என்று மத, இனவெறிப் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் துவங்கியிருக்கிறது.ஆனால், பாஜகவின் இந்த பிரச்சாரத்திற்கு காங்கிரஸ் தலைவர்களும் சரியான பதிலடியைக் கொடுத்து வருகின்றனர்.

“அசாமில் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து, ஐயோ ஊடுருவல்காரர்கள் என பாஜகவினர் பேசுகிறார்கள்.. நான்அமித்ஷாவையும் மோடியையும் கேட் கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக இங்கு யாருடைய ஆட்சி இருந்து வருகிறது? ஏழு ஆண்டுகளாக மத்தியிலும்மோடி ஆட்சிதானே நடக்கிறது... நாட்டின் எல்லையைப் பாதுகாக்க வேண்டியது அமித்ஷா, ராஜ்நாத்சிங், மோடி ஆகியோரின் கடமையா இல்லையா..? மாறாக, வங்கதேசத்தவர்கள் ஊடுருவுகிறார்கள் என்றால், இவர்கள்தங்களின் பொறுப்பை நிறைவேற்றுவதில் தோற்றுப் போய்விட்டார்கள் என்றுதானே பொருள்..? ஊடுருவலைக் கண்காணித்துத் தடுக்க முடியாமல் போய்விட்டார்கள் என்பதுதானே உண்மை..?” என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரான ரன்தீங் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் விளாசியெடுக் கின்றனர். காங்கிரஸ் கூட்டணி வென் றால் மட்டுமே அசாம் பாதுகாப்பாக இருக்கும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால், பாஜக ஊதிவிட்ட விவகாரம், தற்போது அந்தக்கட்சிக்கே எதிரானதாக திரும்பத் துவங்கியுள்ளது.