அன்று
2009 ரயில்வே பட்ஜெட்டில் மாதம் ரூ.1500க்குள் குறைந்த வருவாய் உள்ள முறைசாரா தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ‘இஸ்ஸாட்’ என்கிற பெயரில் மாதந்திர சீசன் டிக்கட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மாதம் ரூ.25 கட்டணத்தில் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயண் செய்ய இத்திட்டம் வழிவகுத்தது. 20012ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் ‘இஸ்ஸாட்‘ சீசன் டிக்கட்டுக்கான பயண தூரம் 100கிலோ மீட்டரிலிருந்து 150 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டது. இதற்கான வருமானச் சான்று நாடாளுமன்ற உறுப்பினர், வட்டாட்சியர், பிடிஓ மூலம் பெற வேண்டும். கோவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பி.ஆர்.நடராஜன் 2,864 பேருக்கு இந்த சான்றிதழ் வழங்கி இஸ்ஸாட் சீசன் டிக்கட் எடுக்க உதவியுள்ளார்.
இன்று
ரயில்வே பட்ஜெட்டையே ஒழித்து பொதுபட்ஜெட்டுடன் இணைத்தது பாஜக அரசு. ஓசையில்லாமல் ஏழை கூலித் தொழிலாளிகளுக்கான ‘இஸ்ஸாட்’ சீசன் டிக்கட்டையே கைகழுவிவிட்டது மோடி அரசு.