election-2019

img

அண்ணே ஆப்பிள் இல்ல மாம்பழம்

திண்டுக்கல், மார்ச் 30-அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதி முத்துவை ஆதரித்து பழனியில் வெள்ளியன்று கூட்டணி கட்சிகளின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் பாமக தலைவர் ராமதாஸ் பங்கேற்றார். இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்கு பதிலாக, எல்லோரும் மறக்காமல் ஆப்பிளுக்கு ஓட்டுப் போடுங்க என்றார். அதிமுக தொண்டர்கள், அண்ணே மாம்பழம் என்று சொல்லுங்க என்று கூறியவுடன் அமைச்சர் சீனிவாசன் சிரித்துக்கொண்டே தலையில் அடித்துக்கொண்டு, மாம்பழத்திற்கு ஓட்டு போடுங்க என்று கேட்டார். இதனால் மேடையில் இருந்தவர்களும், அவரது பேச்சை கேட்க வந்தவர்களும் வாய்விட்டு சிரித்துவிட்டார்கள். (நநி)