tamilnadu

விருதுநகர் , தேனி , திண்டுக்கல் முக்கிய செய்திகள்

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கவனிப்பாரா? திருவில்லிபுத்தூரில் மாவாகும் ரேசன் அரிசி
திருவில்லிபுத்தூர், ஜூன் 25-திருவில்லிபுத்தூர் பகுதியில் ரைஸ் மில் ஒன்றில் ரேஷன் அரிசியை அரைத்து மாவாக்குவதாக திருவில்லிபுத்தூர் வரு வாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விருதுநகர் குடி மைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய் வுத் துறை ஆய்வாளர் ஜான் பிரிட்டோ தலைமையில் காவல்துறையினர் அந்த ரைஸ் மில்லில் சோதனை நடத்தி பத்து பிளாஸ்டிக் பைகளில் இருந்த ரேஷன் புழுங்கல் அரிசி, ஒரு சிப்பம் ரேசன் பச்ச ரிசி, ரேஷன் அரிசியை அரைத்து மாவாக்கி 50 கிலோ எடைகொண்ட 70 சிப்பங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நம்பர் இல்லாத இரு சக்கர வாகனத்தையும் பறி முதல் செய்துள்ளனர்.

கொரோனா பரவல் அச்சத்தில்  அரசு ஊழியர்கள்
கடமலைகுண்டு, ஜூன் 25- தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கிராமத்தில் கடமலை மயிலை ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நாள் தோறும் ஒன்றிய அலுவலகம் வந்து செல் கின்றனர். இந்த நிலையில் புதன்கிழமை கடமலை மயிலை ஒன்றியம் காமன்கல் லூரை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் ஒன்றிய அலுவலகத்தில் பணி யாற்றும் அரசு அலுவலகப் பணியாளர் ஒருவருக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் அவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், ஒன்றிய அலு வலகத்தில் பணியாற்றும் பணியாளர் களுக்கு மாஸ்க், கையுறை, சனிடைசர் உள்ளிட்ட எதுவும் வழங்கவில்லை. இத னால் பணியாளர்கள் அச்சத்துடன் பணி யாற்றி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மயிலாடும் பாறை ஒன்றிய அலுவலக பணியாளர் களை கொரோனா தொற்றிலிருந்து பாது காக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

நிவாரணம் வழங்கல் 
திருவில்லிபுத்தூர், ஜூன் 25- திருவில்லிபுத்தூரில் இயங்கிவரும் டெஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் இராஜபாளையம் வட்டத்திற்குட்பட்ட மேலூர் ராஜகுல ராமன், திருக்குறள் புரம் அய்யனாபுரம், கிருஷ்ணாபுரம் திரு வேங்கடபுரம் சத்திரபட்டி சங்கரபாண்டி யபுரம் சமுசிகாபுரம் கிராமங்களைல் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதா ரத்தை இழந்த 730 தொழிலாளர்கள் குடும் பங்களுக்கு அரிசி மற்றும் பலசரக்கு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங் கப்பட்டன. நிகழ்வில் தொண்டு நிறுவன தலைவர் வேல் மயில், மேலராஜகுல ராமன்ஊராட்சித் தலைவர் விவேகானந் தன் ஊராட்சிதுணைத் தலைவர் முத்து ராஜ், ராமலட்சுமி உள்ளிட்ட பணியாளர் கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்லில் திருவிழாவுக்கு அனுமதி
திண்டுக்கல், ஜூன் 25- திண்டுக்கல் மாவட்டம் கொரோனா தொற்றில் ஆரஞசு பகுதியிலிருந்து பச்சை பகுதியாக அறிவிக்கவிருந்த நிலையில் மீண்டும் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் நகரில் கோவில் திருவிழாக்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர். திண்டுக் கல் போடிநாயக்கன்பட்டியில் இரண்டு தினங்களுக்கு முன்பு திருவிழா நடை பெறுகிறது. முதல் நாள் கோவிலில் கூட் டம் நிரம்பி வழிந்தது. இது போன்று கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கினால் மேலும் தொற்று பரவும் என்பதில் சந்தேகமில்லை. காவல்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் திண்டுக் கல் கொரோனா “சிவப்பு பகுதிக்கு” மாறி விடக்கூடாது. மாவட்ட ஆட்சியர் காவல் துறைக்கு உரிய வழிகாட்டு நெறிமுறை களை வழங்கவேண்டும்.