tamilnadu

வால்பாறை , உதகை முக்கிய செய்திகள்

பழங்குடி மக்களை புறக்கணிக்கும் அரசுப் பேருந்து 4 கி.மீ வரை நடந்து செல்லும் அவலம்

வால்பாறை, செப்.13- பொள்ளாச்சி அடுத்த வெள்ளி காடம் பாறை பகுதியிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பழங்குடியின மலைவாழ் மக்கள் சுமார் 4 கி.மீ. தூரம் நடந்து சென்று பேருந்து ஏறும் அவலம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை வனச்சரகத்திற்குட் பட்டு வெள்ளி காடம்பாறை எனும் வன கிராமம் உள்ளது. இந்த வன கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட பழங்குடியின மலை வாழ் மக்கள் குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இந்நிலையில், இப்பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக இயக் கப்படவில்லை.  இதனால் காடம்பாறை வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் இப் பகுதி மலைவாழ் மக்கள் நடந்தே செல் கின்றனர். பகல், இரவு,  பெரும் மழையிலும் கடுமையான இன்னல்களை சமாளித்தே காடம்பாறை வரை நடந்து சென்று பேருந்து பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, மகப்பேறு காலத்தில் இப்பகுதி பெண்கள் பெரும் துயரத்திற்கு ஆளாவதுடன், பள்ளி மாணவ, மாணவிகள் நாள்தோறும் நடந்தே பள்ளிக்கு செல்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.  முன்னதாக, இப்பகுதியில் மின்விளக்கு வசதிகள் இல்லாத காரணத்தினால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடமும்,  வனத்துறையினரிடமும் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை என இப்பகுதி மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டு கின்றனர். இச்சூழலில் பேருந்து போக்கு வரத்தையும் நிறுத்தி வைத்து தங்களை அரசு நிர்வாகம் வஞ்சிப்பதாக அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

இருசக்கர வாகனம் திருட்டு ஒருவர் கைது

கோவை, செப்.13- கோவையில் இருசக்கர வாகனத்தை திருடி கேரளாவில் விற்க முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி (46).இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் இவர் பணிநிமித்தம் காரணமாக ஈச்சனாரி அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சென்றுள்ளார். பின்னர், திரும்பி வந்து பார்த்த போது சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து பாலுசாமி போத்தனூர் காவல் நிலையில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு  செய்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு  விசாரணை மேற்கொண்டதில் கேரளா மாநிலம் கொழிஞ் சாபாறையை சேர்ந்த சாஜகான் (22) என்ற இளைஞர் இரு சக்கர வாகனத்தை திருடி, அதை கேரளாவில் விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அதிரப்பள்ளி பால்ஸ் காவல்துறையினரின் வாகன சோதனையின் போது சாஜகானை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர் போத்தனூர் காவல்துறை யினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதில் சாஜகான் மீது ஏற்கனவே கேரளாவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், கோவையில் இருந்து இரு சக்கர வாக னங்களை திருடி சென்று கேரளாவில் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்  பறிமுதல்- அபராதம்

உதகை, செப்.13- நீலகிரி மாவட்டத்தில் 6  கிலோ பிளாஸ்டிக் பொருள் கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.22 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில்  உதகை, குன்னூர்,  கூடலூர், நெல்லியாளம் நகராட்சி கள், 11 பேரூராட்சிகள்,  4  ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங் களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருள்களின் பயன்பாடு தொடர்பாக கள ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது தடை செய்யப்பட்ட 186  குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில் கள், சுமார் 6 கிலோ  எடையிலான பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப் பட்டு பறிமுதல் செய்யப்பட் டன. இதற்காக அவர்களி டமிருந்து ரூ.22 ஆயிரம் அபராதம் வசூலிக்கப் பட்டது.