tamilnadu

img

இராமநாதபுரம், திண்டுக்கல்லில் விவசாயிகள் கையெழுத்து இயக்கம்

இராமநாதபுரம்:
மின்சார சட்டம் 2020, அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்தச் சட்டம் 2020, வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு (மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல்) அவசரச் சட்டம் 2020, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020 ஆகிய சட்டங்களை மத்தியபாஜக அரசு திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக இராமநாதபுரத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் எம்.முத்துராமு, மாவட்டச் செயலாளர் வி.மயில்வாகணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாவட்டத்தலைவர் என்.கலையரசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். சிவாஜி மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்ராஜ்குமார் மற்றும் தாலுகா செயலாளர் பி.செல்வராஜ், போஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல்
திண்டுக்கல் தலைமை தபால்நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக 10 ஆயிரம் பேரிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் அனுப்பப்பட்டது. அகில இந்தியவிவசாயிகள் சங்க மத்தியக் குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், தமிழ்நாடு விவசாயிகள்சங்க மாவட்டச் செயலாளர் என்.பெருமாள், மலைத்தோட்ட விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தங்கவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.