தமிழகத்தில் பல்வேறு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்து அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விதிமுறைகள் எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தானா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆளுங்கட்சியினரின் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில்கடைசி ஒரு வாரத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதை தடுத்தால் தான் தேர்தல் நியாயமானமுறையில் நடைபெற்றதாக எடுத்துக் கொள்ளமுடியும். ஆனால் ஆளுங்கட்சியினர் ஒவ்வொரு தொகுதியிலும் வார்டுவாரியாக பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் இறுதிக்கட்ட நேரத்தில் 15 பேருக்கு ஒரு ஆள் என்கிற வீதத்தில் ஆட்களை நியமித்து பணப்பட்டுவாடாவில் ஈடுபட உள்ளதாகவும்விவரம் தெரிந்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.அதே போல் தேர்தல் பறக்கும்படையினர், வருவாய் துறையினர், வருமானவரித்துறையினர் ஆகியோரை ஆளுங்கட்சியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி எதிர்கட்சி வேட்பாளர்களை மிரட்டி வருவதாகவும் தேர்தல்ஆணையத்திடம் புகார் சென்றுள்ளது. இப்படி எல்லை மீறும் ஆளுங்கட்சித் தரப்பின் தேர்தல் விதிமீறல்களை தேர்தல்ஆணையம் கண்டு கொள்ளாமல் இருப்பதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு இந்த தேர்தலில் பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தேர்தல்ஆணையம் பாரபட்சம் காட்டாமல் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்ட ஒரு சுயேட்சையான அமைப்பு என்பதைநிலைநாட்டி நடுநிலைமையோடு செயல்படவேண்டும். அப்போதுதான் தேர்தல் ஆணையத்தை மக்கள் மதிப்பார்கள்.
ஐ.வி.நாகராஜன்