1 நமதே நமதே நாற்பது தொகுதி
நாற்பதும் எதிரிகள் தோற்பது உறுதி
நாற்பதிலும் நமதணிக்கே வாக்களியுங்கள்
நாசகார நோட்டணியைத் தோற்கடியுங்கள்
வெல்க வெல்கவே சூரியக் கூட்டணி
வீழ்க வீழ்கவே ஆரியக் கூட்டணி
2 கொள்கையாளர் ஒன்று சேர்ந்த கூட்டணி இங்கே
கொள்ளைக்காரர் பங்குபோடும் கூட்டணி அங்கே
கொள்கைவேறு கூட்டணியோ வேறுவெவ்வேறு-என்ற
உலகமகா தத்துவத்தைச் சொன்னது யாரு
3 ராமாயணம் எழுதியவர் சேக்கிழாரு-என்று
நாடுபூரா சிரிக்கவச்ச மகான் சொன்னாரு
கொள்கையில்லாக் கூட்டத்துக்கு இன்னொரு-பேரு
தலையில்லாத முண்டம்தானே இந்த சர்க்காரு
4 தலையில்லாத முண்டம் வந்து கதவைத் தட்டுது
சலவை நோட்டைக் கொடுத்து அது ஓட்டு கேக்குது
கொள்ளையிட்ட பணத்தில் கொஞ்சம் கிள்ளி எடுத்துக்
கொடுப்பவனை நம்பிடாதே வெளியே துரத்து
5 கொடித் துணியில் கட்சிப் பேரில் அண்ணா இருப்பார்
கொள்கையிலே அண்ணா இல்லை வேற யாருங்க?
ரூபாய் நோட்டு காந்தியைத்தான் நம்பிடுறாங்க
காந்தி நோட்டை மட்டிலுமே கும்பிடுறாங்க
6 அம்மா இருந்தபோது கொள்ளை இரவில் மட்டுமே
அவங்க ஆவிபோன பிறகு அல்லும் பகலும்தான்
ஆவிபோன கட்சிக்குள்ளே காவி நுழையுது
ஆட்சி கவிழும் அபாயத்தை நீக்க முடியுது
7 அம்மா காரைக் கும்பிட்டாக்கா கோடி குவிக்கலாம்
அய்யா காலைக் கும்பிட்டாக்கா சிறையில் தப்பலாம்
ஒண்ணா ரெண்டா செஞ்ச குற்றம் நூத்துக்கணக்கிலே
உயிரைவாங்கத் தொங்குது வாள் உச்சந்தலையிலே
8 மைனாரிட்டி ஆட்சி தில்லி பாசுக்குத் தெரியும்
மெஜாரிட்டி ஆக்கத் தன பாலுக்குத் தெரியும்
மோடி போட்ட ரோட்டில் எடப்பாடியின் ஆட்சி - அவர்
இருக்கும் வரை சுருட்டிடலாம் இதுதான் சூழ்ச்சி
9 பதிமூணு உயிரைச் சுட்டாய் தூத்துக்குடியிலே
பதிமூணு தடவை ஏற்றவேண்டும் தூக்கிலே
அஞ்சு பேரைக் கொன்றாய் கொடநாட்டுக் கொள்ளையில்
அஞ்சு உழவர் சாகடித்தாய் சேலம் சாலையில்
10 கரை திரும்பா மீனவர்கள் எத்தனை நூறு
கடற்புயலில் மாண்டவர்கள் எத்தனை பேரு
கஜாப் புயல் வீடிழந்தோர் நூறு நூறுகள்
கணக்கிலுண்டா தென்னந்தோப்பு அழிந்த ஊருகள்
11 சர்க்கார் பணம் ரெண்டாயிரம் ரூபா லஞ்சத்தை
தந்துஅடைய முடியாது மக்களின் ஓட்டை
பசித்திருந்த ஏழைகளை மாதக் கணக்கா
பார்த்திடாத உனக்கெதுக்கு மந்திரி சொக்கா
12 புயலடிச்ச போது இங்கே மோடி வந்தாரா
புரண்டு வெள்ளம் வந்தபோது ஓடிவந்தாரா
கச்சத்தீவு மீனவனை காக்கவந்தாரா
கப்பல் படை கொலைக்கு ஞாயம் கேட்க வந்தாரா
13 அறிவு சாந்தன் முருகனோடு ஏழு தமிழரை
அடைச்ச சிறை திறந்திடாத கிண்டி கவர்னரை
ஆணையிட வக்கில்லாத பழனி பன்னீரு
அறிக்கையிலே வடிக்கிறாங்க போலிக் கண்ணீரு
14 அறிவுக்கரசி அனிதாச் செல்வி மாண்டது போதாதா?
அனிதாக் கொலையை நடத்திய கும்பல் ஆண்டது போதாதா
நீட் நுழைவு பழனி செய்த தில்லிக்காணிக்கை
நீட்டைத் தடுக்கப் போவதாகப் புளுகும் வேடிக்கை
15 முப்பத்தேழு பேர் இருந்தும் தில்லிச் சபையிலே
கட்டிட்டாங்க நீட்டை நம்ம குழந்தை தலையிலே
மீண்டும் அந்தக் கட்சியார்கள் டில்லிப்பட்டணம்
போக வேண்டுமா நீங்க முடிவு கட்டணும்
16 மோடியாரின் விரலசைவில் பழநிபன்னீரு
மோடியாரின் கண்ணசைவில் சென்னை சர்க்காரு
மோடி எங்க டாடி என்பார் மந்திரிமாரு
களவைக் காக்கும் உறவு என்று அவர் அறிவாரு
17 மோடியா? லேடியா? மோதிப் பார்ப்போம் வாரியா
என்று சொல்லி மோடியாரை வென்று காட்டினார்
ஜெயாடாடி என்ற பேச்சை அன்று லேடி அம்மா கேட்கலை
கோட்டிருந்தா போயிருக்கும் பேச்சுமூச்சு நொடியில
18 நாடாளுமன்றத்துக்கு நாங்க போனாக்கா
ஓடிவரும் காவிரிநீர் ஆடிப் பெருக்கா
கல்லணையை மூடவேணாம் வருஷக்கணக்கா
கதையளந்த கட்சிதானே அண்ணாதீமூக்கா
19 தில்லியிலே கிழிச்சதென்ன அ.தி.மு.க.
அல்லிபோலக் கேட்டவங்க பிரேமலதாக்கா
கேட்டவங்க மாறிட்டாங்க ஏனோதெரியலே
கேள்வி நிக்கும் அதுக்கு இன்னும் விடை கிடைக்கலே
20 சென்ற தேர்தல் வாக்குறுதி வாசித்துப்பாரு
இந்தத் தேர்தல் அதே புக்கு அட்டைகள் வேறு
அஞ்சு வருஷம் செஞ்சதென்ன பெரிய பூச்சியம்
அ.தி.மு.க. ஆவணமே அதுக்கு சாட்சியம்
முடிவில்லாத முல்லைபெரி யாற்றின் சிக்கலை
முறைதவறித் தடுத்திடும்பா லாற்றின் சிக்கலை
ஆட்சி மொழி இந்தி என்ற உரிமைச் சிக்கலை
ஆள்வதற்குத் தமிழுக்குள்ள தகுதிச் சிக்கலை
தீர்க்க முடியாத இந்த அடிமைச் சர்க்காரை
மிதிக்கவிடாதீர்கள் உங்கள் வாசப்படிகளை
21 உச்சநீதிக்குள்ளே மோடியார் தலையீட்டை
உளவறியும் சிபிஐயின் உள்முரண்பாட்டை
ரிசர்வ்வங்கிப் பணம் பறிக்கும் நரிவிளையாட்டை
மல்லையாக்கள் கொள்ளையிட்ட வங்கித் திருட்டை
தடுக்கமுடியாத மோடி தகிடுதத்தத்தை
தாங்க முடியாது இனி இந்த ஆபத்தை
22 ஆண்டுதோறும் ரெண்டு கோடிப் பேருக்கு வேலை
அஞ்சு ஆண்டில் பத்துகோடிப் பேருக்கு வேலை
நான் தருவேன் என்று சொன்னார் நரேந்திரமோடி
நம்பிக்கெட்ட மக்கள் நூத்திமுப்பதுகோடி
23 கருப்புப் பணம் புடிக்கப் போறேன் கோடி கோடியா
கணக்கில் போட அனுப்பபோறேன் லாரி லாரியா
பொய்யைச் சொல்லிப் பிரதமராய் ஆனார் மோடிஜி
இதோ-புட்டுக்கிச்சி தேர்தலிலே தாமரைக்கட்சி
24 ஏசுமதம் கூடாதாம் இஸ்லாம்மதம் கூடாதாம்
இந்துமதம் மட்டிலுமே இந்தியாவின் சொந்தமாம்
அண்ணன் தம்பியாக வாழ்ந்தோம் ஆயிரம் காலம்
இப்போ அடிக்கலாமா வூடுபூந்து என்னடா ஞாயம்
25 எல்லா மதம் சொல்லுவது மனித நேயமே
இதைப் பிளக்கும் வருணாயுதம் பார்ப்பனீயமே
ஈரோட்டாரும் அம்பேத்காரும் சாதித்தடைகளை
எதிர்த்ததற்கு உடைக்கலாமா அவங்க சிலைகளை
26 அதானிகள் அம்பானிகள் போன்ற முதலைகள்
ஆயிரங்கோடிக் கணக்கில் உபரிக்கொள்ளைகள்
அடிப்பதற்குத் திறந்துவிட்டார் அரசின்கதவுகள்
அவர்களுக்கு மோடிசெய்யும் வர்க்க உதவிகள்
27 பட்டேல் உயரம்மீறும் மோடி ஊழலின் உயரம்
பாரிசிலே செய்த ரஃபேல் விமான பேரம்
மோடி திருட்டை ரோட்டில் போட்டு உடைத்தார்
இந்துராம்ராமை மிரட்டிப்பார்த்து மோடி மாட்டிக்கொண்டாராம்
28 பொல்லா ஆட்சி என்பதற்கு ஆயிரம் சாட்சி
ஆயிரத்தில் ஒன்றுதாங்க கோவை பொள்ளாச்சி
கதறக் கதறக் குதறப்பட்ட அபலைச் சிறுமிகள்
கறையைமூடி மறைக்கும் ஆளும்கட்சிக் கிருமிகள்
29 அபலைக் குரலைப் பதிவு செய்த நக்கீரா சபாஷ்
ஆளும்சபா மிரட்டினாலும் டோன்ட்கேர் கோபால்
பொள்ளாச்சிக்குக் காரணமே கல்லா ஆட்சியே
நல்ல ஆட்சிநாளை மலரும் பொள்ளாச்சி முடியும்
30 நாலு லட்சம் கோடி கடன் நம்ம தலையிலே
நசுக்குதுங்க கடன் பளுவைச் சுமக்க முடியலே
நாலில் பாதி அமுக்கிட்டாங்க சொந்தக் கணக்கிலே
நாடுதாண்டி வாங்கும் சொத்து டாலர் பணத்திலே
31 ஜெயாவுக்குச் சொத்திருக்கு பூலோகம் பூரா
தெரிஞ்சவங்க ஒருகுடும்பம் சசீவகையறா
புதையல் வைத்து முதல்வராக முயலும் தினகா
தோற்கப்போகும் உனது கட்சி தேர்தல் பலிகடா
32 குட்கா விற்க லஞ்சப் பணம் எண்பது கோடி
வழக்கில் மாட்டிக்கிட்டார் சுகா தாரமந்திரி
ராஜினாமா பண்ணவில்லை விஜயபாஸ்கரு
லஞ்சத்துக்குப் பாதுகாப்பு மோடி சர்க்காரு
33 சாதி தாண்டி மணம் புரிந்தால் சட்டப்படி குற்றமில்லை
குற்றமில்லாத் திருமணத்தைத் தடுக்கிறார்கள்
வெட்கமில்ல தாழ்ந்த சாதிக்காரர்களைக் கொல்வதின்னும்
நிற்கவில்லை தலைவர்களாய் நடிப்பவர்கள் எவர்க்கும் இதில் துக்கமில்லை
34 தருமபுரி இளவரசன் கொல்லப்பட்டான் ரயிலிலே
கொல்லப்பட்டான் கோகுல்ராஜ் தலையிழந்த நிலையிலே
நடுப்பகலில் நடுத்தெருவில் உடுமலையில் சங்கரை
வெட்டியபின் பங்கிட்டாங்க வெற்றிவிழாப் பொங்கலை
35 சாதிமானம் என்ற பேரால் ஆணவக் கொலை
சதியில் நூறு பங்கு நாட்டின் காவலர்துறை
கொலைகளுக்குத் தலைமை தாங்கும் சாதியின் சங்கம்
கொடியவர்க்கு அடிபணியும் எடஅரசாங்கம்
36 ஜெயா அரசைக் கண்டித்தாரு மருத்துவர் ஐயா
சிறையில் போட்டுத் தண்டித்தது ஞாயமா ஜெயா
என்று கேட்டுக் கொதித்தெழுந்த கட்சி பா.ம.க.
இன்று அந்தக் கட்சிப் பெருமை ஏழு சீட்டுக்கா
37 ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் நமது மக்களே
உழைக்கும் வர்க்கம் வன்னியர்கள் நமது மக்களே
அனைத்துச் சாதித் தமிழர்களும் தமிழ்ச்சமுதாயம்
அதில் பகையைத் தூண்டுவது என்னங்க ஞாயம்?
38 தேசியமும் திராவிடமும் மார்க்சியமும் கொள்கையில்
பாசிசத்தைத் தோற்கடித்து வாகை சூடும் தில்லியில்
கோடியிசம் ஒண்ணுதாங்க கொள்கையிசம் ஊழலில்
மோடிகார்டு ஊழல் காக்கும் பாடிகார்டு தேர்தலில்!