education

img

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு - காலியிடங்கள்: 268

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 268 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Assistant
கல்வித்தகுதி: Science/ Arts/ Commerce/ Engineering/ Medicine பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்புடன் கம்யூட்டரில் இளநிலைப் பட்டம்/ டிப்ளமோ சான்று பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Reader/ Examiner
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

3. பணியின் பெயர்: Xerox Operator
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மொத்த காலியிடங்கள்: 268
மேற்கண்ட 3 பணிகளுக்குமான வயதுவரம்பு 1.7.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். MBC & DC/ BC/ BCM/ SC/ SC(A)/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்கள் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, English Language Proficiency தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். விதவைகள்/ SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 21.7.2019. 
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.