education

img

ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் வேலை வாய்ப்பு 

இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் (ராஜ்பாஷா) மற்றும் உதவி மேலாளர் (நெறிமுறை மற்றும் பாதுகாப்பு) கிரேடு ‘ஏ’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி: Assistant Manager (Rajbhasha)

காலியிடங்கள்: 06

வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும் 

தகுதி: இந்தியில் முதுநிலைப் பட்டம், மொழிப்பெயர்ப்பு பிரிவில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: Assistant Manager (Protocol & Security)

காலியிடங்கள்: 03

வயதுவரம்பு: 25 முதல் 40க்குள் இருக்க வேண்டும் 

தகுதி: இந்திய ராணுவம், விமானம், கடற்படையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு தாள்கள் கொண்டு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.100, ஆர்பிஐ பணியாளர் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://opportunities.rbi.org.in என்ற லிங்கில் பயன்படுத்திக்கொள்ளவும்.