education

img

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு... 91.46% மாணவர்கள் தேர்ச்சி... 

சென்னை 
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியிடப்பட்டன.  கொரோனா பாதிப்பு காரணமாக ஒருசில பாடங்களுக்கு மட்டுமே தேர்வு வைக்கப்பட்டது. மற்ற பாடங்களுக்கு தேர்வு வைக்கவில்லை. உள் மதிப்பீடு மற்றும் சிறப்பாகத் தேர்வு எழுதிய பாடங்களின் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிருந்த நிலையில், இன்று தேர்வு முடிவு வெளியாகியது. 

மொத்தம் 18 லட்சத்து 85 ஆயிரத்து 885 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 18 லட்சத்து 73 ஆயிரத்து 15 பேர் தேர்வை எதிர் கொண்டனர். இதில் 17 லட்சத்து 13 ஆயிரத்து 121 பேர் தேர்ச்சி (91.46% மாணவர்கள் தேர்ச்சி) அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். 93.31 சதவிகித மாணவிகளும், 90.14 சதவிகித மாணவர்களும், 78.75 சதவிகித மூன்றாம் பாலின மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். நடப்பாண்டு தேர்வு முடிவில் மெரிட் பட்டியலோ, மதிப்பெண்களோ வெளியிடப்படவில்லை. கிரேடு அடிப்படையில் மட்டுமே முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுர மண்டலம் 99.28 சதவிகித தேர்ச்சியுடன் முதலிடத்தை பிடித்தது. சென்னை மண்டலம் (98.95%) 2-வது இடத்தையும், பெங்களூரு (98.23 %) மண்டலம் 3-வது  இடத்தையும் பிடித்தது.

;