education

img

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை- யுஜிசி அறிவுறுத்தல்

புதுதில்லி,நவம்பர்.05- ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க யுஜிசி உயர்கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிறலுமாக நிறுத்தி சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்குமாறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சுற்றறிக்கை ஒன்ற்றை யுஜிசி உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது.