பொதுத்துறை வங்கியான SBI-வங்கியில் Specialist Officer பிரிவின் கீழ் உள்ள பல்வேறு பணிகளுக்கான 477 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி பிரிவின் பெயர்: Specialist Officer
கல்வித்தகுதி: Computer Science Engineering/ IT/ ECE/ Electronic & Instrumentation/ Electronics போன்ற பொறியியல் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பு BE/ B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது M.Sc.Computer Science/ M.Sc.IT/ MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம்:
1. கிரேடு - JMGS I - ரூ.23,700 - 42,020
2. கிரேடு - MMGS II - ரூ.31,705 - 45,950
3. கிரேடு - MMGS III - ரூ.42,120 - 51,490
4. கிரேடு - SMGS IV - ரூ.50,030 - 59,170
தேர்ந்தெடுக்கப்படும் முறை: கிரேடு SMGS - IV ன் கீழ் வரும் பணிகளுக்கு நேர்முகத் தேர்வின் மூலமாகவும் இதர பணிகளுக்கு ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வின் மூலமாகவும் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு 20.10.2019 அன்று நடைபெறும்.
எழுத்துத் தேர்விற்கான Call letter 10.10.2019 தேதி முதல் SBI இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்: UR/ EWS/ OBC பிரிவினர்களுக்கு ரூ.750. (SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு ரூ.125) இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sbi.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 25.9.2019.மேலும் காலியிடம் ஏற்பட்டுள்ள பணியின் பெயர்கள், கிரேடு, காலியிட விபரம் மற்றம் வயதுவரம்பு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.