education

img

ஊரடங்கு நிறைவு பெற்ற பின் பொதுத்தேர்வு நடத்தப்படும்... சிபிஎஸ்இ அறிவிப்பு 

தில்லி 
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த ஒருமாத காலமாக ஊரடங்கு கடைப்பிடித்து வரும் நிலையில், மே 3-ஆம் தேதியோடு 2-ஆம் கட்ட ஊரடங்கு நிறைவு பெறுகிறது. 

இன்னும் கொரோனா பரவல் கட்டுக்குள் இல்லாததால் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஊரடங்கு முடிந்த பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படும் என சிபிஎஸ்இ தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

பொதுத்தேர்வுகளை நடத்த போதிய கால அவகாசம் இருப்பதால் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை. மேலும் பொதுத்தேர்வுகள் துவங்குவதற்கு 10 நாட்கள் முன்பாகவே தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.