இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள 926 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Assistant / காலியிடங்கள்: 926
சம்பளவிகிதம்: ரூ.14,650 - 34,990
வயதுவரம்பு: 1.12.2019 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடத்தில் குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: RBI-ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் Language Proficiency Test மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
முதல் நிலை தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி 14, 15
மெயின் தேர்வு நடைபெறும் நாள்: மார்ச் (தேதி அறிவிக்கவில்லை)
தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது/ OBC/ EWS பிரிவினர்களுக்கு ரூ.450. SC/ ST/ PWD/ EX-SM பிரிவினர்களுக்கு ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.rbi.org.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 16.1.2020.மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.