தமிழக வனத்துறையில் உள்ள வனக்காவலர் மற்றும் டிரைவர் பணிக்கான 320 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Forest Guard
2. பணியின் பெயர்: Forest Guard with Driving Licence
மொத்த காலியிடங்கள்: 320
மேற்கண்ட இரண்டு பணிகளுக்குமான காலியிடப்பகிர்வு இணையதளத்தில் கொடுக்கப்படுள்ளது.
சம்பள விகிதம்: ரூ.18,200 - 57,900
வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி பொதுப்பிரிவினர் 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ SCA/ ST/ MBC/ DC/ BC/ BCM பிரிவினர்கள் மற்றும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் 21 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர்கள் 21 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
Forest Guard: கணிதம் அல்லது அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Forest Guard with Driving Licence: கணிதம் அல்லது அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக/ கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 வருடம் ஓட்டுநராக பணிபுரிந்திருக்க வேண்டும். மேலும் முதலுதவி செய்தல், வாகனங்களில் ஏற்படும் சிறிய பழுதுகளை சரி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தமிழ்நாடு வனத்துறை சீருடை பணியாளர் தேர்வாணயத்தால்(TNFUSRC) நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, உடற் திறன் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. (SC/ ST/ SCA பிரிவினர்களுக்கு ரூ.150). இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.forests.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஜனவரி மூனறாவது வாரத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: பிப்ரவரி முதல் வாரம்.மேலும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, உடற் திறன் தேர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.