புதுதில்லி.நவம்பர்.26- தைப்பொங்கல் அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
2025 பொங்கல் (ஜன.14) அன்று பட்டயக் கணக்காளர் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அறுவடைத் திருநாளான" பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதைக் கருத்தில் கொண்டு தேர்வர்களுக்குச் சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமனுக்கும் ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து தற்போது தைப்பொங்கல் அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் தேர்வை வேறு தேதிக்கு மாற்றம் செய்து இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி எக்ஸ் தள பக்கத்தில்; தனது கோரிக்கையை ஏற்றுத் தேர்வு தேதியை மாற்றியதற்கு வரவேற்பைத் தெரிவித்துள்ளார்.