சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்குகிறது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகி உள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ஆம் தேதி வரையிலும், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி மார்ச் 13-ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
www.cbse.nic.in / www.cbse.gov.in. ஆகிய சிபிஎஸ்இ-யின் அதிகாரபூர்வ இணையதளங்களிலும் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.