புதுதில்லி,பிப்.26- ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஒரு பள்ளிக்கு மட்டும் அங்கீகாரம் பெற்றால் போதும் என சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாநிலத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்குவதற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது ஒன்றிய அரசு. இது மாநில உரிமைகளைப் பறிக்கு நடவடிக்கை எனப் பலதரப்பிலும் கண்டனங்கள் எழும்பி வருகின்றன.
இந்நிலையில் ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் அங்கீகாரம் பெறத் தேவையில்லை. ஒரு பள்ளிக்கு மட்டும் அங்கீகாரம் பெற்றால் போதும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது
ஒரு நிர்வாகத்தின் கீழ் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் அங்கீகார சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமென்ற விதிமுறைகளை சிபிஎஸ்இ தற்போது திருத்தம் செய்துள்ளது.