education

img

தேர்வுகள் குறித்து விளக்கம்.. டிச.3-ல் மாணவர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் கலந்துரையாடல்...

புதுதில்லி:
நுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகங்களைப் போக்க டிசம்பர் 3 ஆம் தேதியன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இணையவழியில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறுதிட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தஉயர்மட்ட ஆய்வுக்குழு கூட்டம் அண்மையில் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெற்றது. இதில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ),பல்வேறு கல்வி வாரியங்களில் தற்போதுள்ளசூழ்நிலையை மதிப்பீடு செய்து, ஜேஇஇ, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள், போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டங்களைக் கொண்டு வரமுடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகின. இது மாணவர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை எழுப்பியது.இந்நிலையில் இவை குறித்த சந்தேகங்களைப் போக்க டிசம்பர் 3 ஆம் தேதி மத்தியக்கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களிடம் கலந்துரையாடுகிறார்.இணையவழியில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

இதுகுறித்துத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர்,  2020ஆம் ஆண்டு அத்தனை சிறப்பாக அமைந்திருக்கவில்லை என்பதை உணர்கிறேன். உங்களின் வருங்காலம் குறித்து நீங்கள்கவலைப்பட்டிருக்கலாம். வரப்போகும் நுழைவுத் தேர்வுகள், போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் குறித்து டிசம்பர் 3 ஆம் தேதி உங்களுடன் கலந்துரையாட உள்ளேன். #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேக்கில் உங்களின் கருத்துக்கள்/கேள்விகளை முன்வைக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.