education

img

எதிர்கால தலைமுறையை பாதுகாப்போம்! - ஆர்.செம்மலர்

மத்திய பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கையை ஜூன் மாதம் அறிமுகம்  செய்தது. நாடெங்கிலுமிருந்து லட்சக்கணக் கான திருத்தங்கள் வந்துள்ளதாகவும், அவை களின் மீதான பரிசீலனை முடிந்து நவம்பர் மாதம்  அது அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளது. ஏற்கனவே பல்வேறு காலகட்டங்களில் கல்விக் கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் பாஜக அரசு வெளியிட்டுள்ள இந்த வரைவு அறிக்கையின் தன்மை கல்வியை இந்தி  திணிப்பு, இந்துத்துவ அமலாக்கம் மற்றும் கார்ப்பரேட் மயம் எனும் மூன்று அம்சங்களில் அடக்குவதாக உள்ளது. சுதந்திரத்திற்கு வெகு காலம் முன்பு இந்திய சாதியமைப்பிற்கு தகுந்த வாறு வெகு சில மக்களுக்கு மட்டும் கல்வி தந்த  குருகுலக் கல்விமுறை பிரிட்டிஷ் ஆட்சியின் போது மெக்காலே கல்வித் திட்டம் என அனை வருக்குமான குமாஸ்தா கல்வி முறையாக மாறியது.

சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் வளர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவம் இதையே பயன்படுத்தி தன் தேவைக்கு தகுந்த படி கல்வி தந்தது. மக்கள் 80களின் இறுதி வரை பிறந்த குழந்தை படிப்படியாய் தன் அசைவுகளில் மாற்றம் காண்பது போல் ஆறு  வயதான பின்பு எழுத்தறிவு எண்ணறிவு என  நிதானமாய்க் கற்றனர். முதலாளித்துவ வளர்ச்சிக்கு உதவும் வகையில் அன்றைக்கு இருந்த வேலை வாய்ப்புகள் பகிர்ந்து தரப்பட்டது.

1990களில் மேலும் மேலும் லாபம் தேடும் நோக்கில் இந்திய முதலாளித்துவம் உலக சந்தை, உலக வர்த்தக மையம், உலக நிதி மூல தனத்துடன் இணைந்து பயணிக்கத் துவங்கி யது. உலகவங்கி ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டு தொழில்துறையிலும் வர்த்தகத்திலும்  தனியார்மயமும் தாராளவாதமும் புகுத்தப் பட்டது. மத்திய அரசு அதற்கு உதவும் வகையில்  மக்களின் சிந்தனைப் போக்கு உருவாக திட்ட மிட்டு கல்வியிலும் புதிய கொள்கையை அறி வித்தது. அதிலிருந்து கல்வி வியாபாரம் படு வேகமாய் நடக்கத் துவங்கியதை அரசின் பல்வேறு முடிவுகள் மற்றும் கற்றல் முறை மாறு பாடு மூலம் உணரலாம். குறிப்பாக அரசு தன்  வரவுசெலவு திட்டத்தில் கல்விக்கான நிதி  ஒதுக்கீடுகளை குறைக்கத் துவங்கியது. அனை வருக்கும் கல்வி தரும் பொறுப்பிலிருந்து தன்னை சிறிது சிறிதாக விடுவித்துக் கொள்ள வும் தனியார் துறை நோக்கி நகரத் தொடங்கி யது. இதனால் அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள், கட்டிட பராமரிப்பு, கழிவறை, குடி நீர் வசதி போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாத சூழல் உருவாகி இயல்  பாகவே மக்கள் மனதில் அரசுப் பள்ளிகள் மீதான  மரியாதையைக் குறைத்து வட்டிக்கு கடன் வாங்கியாவது தனியாரை நோக்கிச் செல்ல வைத்தது. இதன் காரணமாக ஏழைச் சிறார்கள்  மட்டுமே அரசுப் பள்ளியை நாடும் நிலை அதிக ரிக்க அதில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை  வெகுவாக குறைந்தது.

தனியார் பள்ளிகளில் ஏற்கனவே மும்மொழிக் கொள்கை அமலாகி வருகிறது. அத்துடன் தாய்மொழிப் பேச்சுக்கு தடை விதிக்கும் நிலையும் இருக்கின்றது. கடுமை யான மனப்பாடப் பயிற்சியும், முதலிடம் பெறும் வெறி உருவாக்கமும் இணைந்த கல்வி முறை காரணமாக குழந்தைகள் தனித் தனி தீவு களாக மாறியுள்ளனர். அவர்களின் மன  அழுத்தமும் அவர்கள் மீதான வன்முறைகளும் அதிகரித்துள்ளன. சமீபத்தில் ஒரு பள்ளியில் யூகேஜி பயிலும்  குழந்தைக்கு இந்தி மொழித் தேர்வு நடத்தப் பட்டது. முன் தயாரிப்போடு சென்றும் ஏதோ  ஒரு சொல்லை மறந்து புத்தகத்தை எடுத்து  பார்த்து எழுதி விட்டது. அது காப்பியடித்ததாக கூறிய ஆசிரியரும், அவர் அதனை தெரி வித்த முறையால் சங்கடம் அடைந்த பெற்றோ ரும் குழந்தையை அடித்தனர். அழுது சமா தானமான பிறகு குழந்தை “காப்பி அடிக்கிற துன்னா என்னம்மா” என்று கேட்ட கேள்விக்கு யார் பதில் கூறுவது?\

தேசிய கல்விக் கொள்கை வரும் முன்பே நீட் பயிற்சி மையங்கள் மூலம் வருமானம் தேடும்  தனியாருக்கு உதவும் வகையிலும், தனியார்  மருத்துவக் கல்லூரிகள் லாபம் தேடவும் மத்திய  அரசு மருத்துவத்தில் நீட் தேர்வைத் திணித்தது.  மாநில அரசு அதை மறுக்கும் திராணியற்று அமல்படுத்தியது. கடந்த காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தவறிழைத்த குழந்தைகள் இதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து பயிற்சி எடுத்தாலும் வெல்வதற்கான தைரியம் அற்றுப் போய் ஆள் மாறாட்டம் செய்து கல்லூரியில் சேரும் குற்றவாளிகளாக மாறியுள்ளனர். மத்திய பிரதேசத்தின் வியாபம் ஊழல் போல் தமிழகத்திலும் உருவாகியுள்ளது.

இன்னொரு குழந்தை ஒன்றாம் வகுப்பில்  90 விழுக்காடு மதிப்பெண் பெற்ற போதும் அவள் 100 விழுக்காடு வாங்க வேண்டும் என்றால்  அடித்து கற்றுத் தருமாறு தாயே டியூசன் டீச்சரி டம் கூறிய நிலையில் முதுகு நிறைந்த காயங்க ளுடன் செய்தியில் காட்டப்படுகிறாள். பெற்றோ ரின் இந்த மனநிலை பற்றி என்ன சொல்வது? இப்படிப்பட்ட சூழலில் தான் தேசிய கல்விக் கொள்கை வரும் முன்பே அதில் உள்ளபடி அரசுப் பள்ளிகள் எண்ணிக்கையைக் குறைக்க வும், ஐந்தாம் வகுப்பிற்கும் எட்டாம் வகுப்பிற் கும் கட்டாயப் பொதுத்தேர்வு நடத்தவும் தமிழக  அரசு அறிவித்து கடும் எதிர்ப்பிற்கு பிறகு பின்வாங்கியுள்ளது.

இருபதாண்டுகள் வரை இளைஞர்களை பள்ளிகளிலேயே அடைத்து வைப்பதன் மூலம்  முதலாளித்துவம் தன் நோக்கத்தில் தங்குதடை யற்று முன் செல்லும் எனும் அடிப்படையில் இருந்த அமெரிக்க கல்விமுறை பற்றி கிரேஸ் லீ  போர்க் எனும் எழுத்தாளர் ஆய்வு செய்தார். அவர் 1970ல் அமெரிக்க கல்வி ஆணையர்  ஜேம்ஸ் ஆலன் அறிவித்த பத்தாண்டு கல்வித் திட்டம் பற்றி மன்த்லி ரிவ்யூ பத்திரிகையில் கட்டுரை எழுதினார். தொழில்துறை கல்வி யாளர்கள் முன்வைத்த 1. சம்பாதிக்கும் சக்தியை அதிகரிப்பது தான் கல்வியின் அடிப்படை. 2. அச்சடிக்கப்பட்ட தாளில் உள்ள வார்த்தைகளுக்கான அவர்களது எதிர்வினையிலிருந்து குழந்தைகளின் சாதனைகளை அளவிட முடியும். 3. கல்வி கற்க சிறந்த ஒரே இடம் பள்ளிதான். எத்தனை காலம் கற்க கட்டாயப்படுத்துகிறோமோ அந்த அளவு அதிகம் கற்றவர்களாக அவர்கள் மாறுவார்கள் என்று அறிவித்த கல்விக் கொள்கைகள் சரியானவை அல்ல எனும் மதிப்பீட்டை அதில் அவர் குறிப்பிட்டார். நமது புதிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்து உன்னிப்பாக கவனிப்பவர்கள் மேற்கண்ட மதிப்பீடு இங்கும் மிகப் பொருந்தி வருவதை உணரலாம்.

அத்துடன் தற்கொ லையை நோக்கி தள்ளப்படும் அளவு குழந்தைகள் மீதான வன்முறைகளும் மன அழுத்தங்களும் அதிகரித்து வரும் நிலையில் “இளைஞனோ வயதானவரோ ஒரு மனிதன் தகவல்கள் திறமைகளை அடைத்து வைத்திருக்கும் கிட்டங்கியல்ல. பரிசுகள் அல்லது தண்டனைகள் மூலம் கற்க வைத்தால் அவர்கள் சிறந்தவர்களாக வளர முடியாது” எனும் மதிப்பீடு கூட நமக்கும் பொருந்துவதை உணரலாம். இந்த சூழலில் கற்றல் முறையை மேலும் மோசமாக்கும் வகையில் வெளியிடப்பட்ட தேசிய கல்விக் கொள்கையின் சில அம்சங்களை தமிழக அரசு முன்கூட்டியே அமலாக்க முயற்சி செய்தது. குறிப்பாக அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் என்று அறிவித்தது. ஏழைக் குழந்தைகளின் கல்வி பாதிக்கும், இடைநிற்றல் அதிகரிக்கும், அது சமூகப் பிரச்சனைகளை கடுமையாக்கும் எனும் எதிர்ப்புகள் வலுத்த பிறகு அரசு அதிலிருந்து பின்வாங்கியுள்ளது.

கடந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் கேஜி வகுப்புகள் துவக்கம் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அதற்கான கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனங்கள் இன்றி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டம் எனும் பெயரில் இந்தி திணிப்பும், மூன்று வயது முதலே குழந்தைகள் கல்வி பயில துவங்க வேண்டும் என்பதும் முக்கிய அம்சமாக இருப்பதை ஏற்பதற்குத் தயார் எனும் வகையில் தான் தமிழக அரசு இதில் மெத்தனம் காட்டுகிறதோ எனும் ஐயம் எழுவதை தவிர்க்க இயலவில்லை. பள்ளிகளில் தற்காப்புக் கலைகள் கற்றுத் தரப்படும், நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படும் என்பதுடன் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுடன் வெளியிலிருந்து சமூக ஆர்வலர்கள் என்போரும் இவைகளை போதிக்க அனுமதிக்கப் படுவர் எனும் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சுற்றறிக்கை இன்னும் அமலுக்கு வராத தேசிய கல்விக் கொள்கை வரைவின் ஒரு பகுதியாக உள்ளதைக் காணலாம்.

சமீப காலமாக பல அரசுப் பள்ளிகளில் கூட இந்துத்துவ சித்தாந்த அடிப்படை கொண்ட ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் பரிவார் அமைப்புகள் ஷாகா எனும் பெயரில் மாணவர்களுக்கு பயிற்சி தரும் ஏற்பாடுகள் உள்ளதைக் காண்கிறோம். அத்துடன் சாதி மறுப்பை வலியுறுத்திய பெரியார் பிறந்த மண் என்று கூறிக் கொண்டே சாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்ட ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிய துரோணரின் பெயரை அரசுப் பள்ளிக்கு வைப்பது எவ்வளவு கொடூரமானது! இந்த அளவு அரசு துணிவதன் தீங்கை நாம் சிந்திக்க வேண்டிய தருணமிது. இது போதாதென சதுர்வர்ணம் மாயாசிருஷ்டி எனக் கூறும் கீதையை பொறியியல் கல்லூரி மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற அண்ணாப் பல்கலைக்கழக அறிவிப்பையும் இணைத்து சிந்தித்தால் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசும் மாணவர்களை எத்தகைய பாதையில் அழைத்துச் செல்கிறது என்பதை தெளிவாக உணர முடியும்.எனவே இத்தகைய கல்விக்கொள்கைக்கு எதிராக மாணவர்களும் பெற்றோரும் ஆசிரியர்களும் ஓரணியில் திரண்டு வலுவாக குரல் எழுப்பினால் தான் வருங்கால தலைமுறையை பெரும் ஆபத்தில் இருந்து பாதுகாக்க முடியும்.