economics

தரமதிப்பீட்டு நிறுவனமான ‘பிட்ச்’ எச்சரிக்கை டிசம்பருக்குள் ரெப்போ விகிதம் 5.9 % ஆக அதிகரிக்கும்!

புதுதில்லி, ஜூன் 15 - இந்திய ரிசா்வ் வங்கி ரெப்போ வட்டி  விகிதங்களை டிசம்பா் மாதத்துக்குள் 5.9 சதவிகிதம் என்ற அளவிற்கு உயர் த்தும் என்று தரமதிப்பீட்டு நிறுவன மான ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ (Fitch Ratings) கணித்துள்ளது. வங்கிகளுக்கு, குறுகிய கால அடிப் படையில் ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் களுக்கான வட்டி (ரெப்போ) விகிதம் கடந்த வாரம் 0.50 சதவிகிதம் உயர்த்தப் பட்டது. கடந்த மே மாதத்தில்  ரெப்போ  விகிதத்தை 0.40 சதவிகிதம் உயர்த்தி யிருந்த நிலையில், இரண்டாவது முறை யாக ஜூனிலும் ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டதால், ஒட்டுமொத்த ரெப்போ விகிதமானது 4.90 சதவிகித மாக உயர்ந்தது. இதன்மூலம் தனி நபர் கடன்,  வாகனக் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களுக்கான வட்டி  விகிதமும் தற்போது அதிகரித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேசனல் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி உள்ளிட்டவை ரெப் போவுடன் தொடா்புடைய (Repo Linked Lending Rate -RLLR) கடன்களுக்கான வட்டி யை உயர்த்தி விட்டன. இது சாமானிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு தற்போது சுமையாக மாறியுள்ளது. இந்நிலையில்தான், 2022 டிசம்பர் மாதத்திற்குள், ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் 5.90 சதவிகிதம் என்ற  அளவிற்கு உயரும் என்று தரமதிப்பீட்டு நிறுவனமான ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ கணித் துள்ளது. “பணவீக்கம் குறித்த கண் ணோட்டம் நம்பிக்கையை உருவாக் கும் வகையில் இல்லாத காரணத்தால் வரும் டிசம்பா் மாதத்துக்குள் ரிசா்வ் வங்கி ரெப்போ விகிதங்களை மேலும் அதிகரித்து 5.9 சதவிகிதம் என்ற அளவில் நிர்ணயிக்கும்” என்று ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ கூறியுள்ளது. முன்பு ரெப்போ விகிதம் 2022 டிசம்பருக்குள் 5 சதவிகிதமாக உயரும்  என்றே ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ கணித்திரு ந்தது. அதற்கேற்ப ஜூன் மாதத்திற்கு உள்ளேயே 4.90 சதவிகிதம் என்ற அளவிற்கு ரெப்போ விகிதம் உயர்ந்து விட்டது. இந்நிலையில்தான், 5.90 சதவிகிதம் என்ற புதிய கணிப்பை ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ வெளியிட்டுள்ளது.

;