economics

img

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு -  1,500 புள்ளிகள் குறைந்த பங்குச் சந்தை சென்செக்ஸ் 

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.28 யை தொட்டு வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. பங்குச் சந்தைகளில் விற்பனை மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத ஏற்றம் போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. பங்குச் சந்தையில் சென்செக்ஸ் சுமார் 1,500 புள்ளிகள் குறைந்தது. அமெரிக்க நுகர்வோர் விலைக் குறியீடு, மத்திய வங்கி கொள்கையை கடுமையாக்கும் என்ற அச்சத்தில் ஆசிய பங்குகள் வீழ்ச்சியடைந்தன. நாஸ்டாக் 100 ஒப்பந்தங்கள் 1.8 சதவிகிதம் குறைந்தது, S&P 500க்கான ஒப்பந்தங்கள் 1.3 சதவிகிதம் குறைந்தன.

;