economics

img

உக்ரைன் - ரஷ்ய போரின் எதிரொலி - நிலக்கரி விலை உயரும் அபாயம்

உக்ரைன் - ரஷ்யா போரின் எதிரொலியாகப் பல முக்கிய பொருட்களின் விலை மிக மோசமான விலையேற்றத்தினை கண்டுள்ளது. அதில், நிலக்கரி விலையேற்றமும் ஒன்று. நிலக்கரி விலையேற்றத்தினால் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் மின் உற்பத்தி, ஸ்டீல் உற்பத்தி, சிமெண்ட் மற்றும் அலுமினியம் உற்பத்தியில் பெரியளவு பாதிப்பு ஏற்படுத்தலாம் எனஅஞ்சப்படுகிறது.

உக்ரைன் - ரஷ்யா போரின் காரணமாக நிலக்கரி விலையானது முதல் காலாண்டில் 45-55 சதவிகிதம் அதிகரிக்கலாம் என்று மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா கணித்துள்ளது. வரவிருக்கும் நிதியாண்டு முழுவதுமே நிலக்கரியின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், ரஷ்யாவின் நிலக்கரி இறக்குமதியினை எந்த நாடும் ஈடுசெய்ய முடியாது என்பதால் இந்த விலையேற்றம் இருக்கலாம் என்றும்  இக்ரா தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் 601 மில்லியன் டன்னாக நிலக்கரி உற்பத்தி உள்ளது. இதனை அடுத்த நிதியாண்டில் 700 மில்லியன் டன்னாக இந்தியா உயர்ந்த வேண்டும், இல்லையெனில் இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் இக்ரா எச்சரித்துள்ளது. 

உக்ரைன்-ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவின் நிலக்கரி விலையானது கடந்த மார்ச் மாதம் டன்னுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 330 டாலர்களாக உச்சம் தொட்டுள்ளது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இந்திய அனல் மின் நிலையங்களுக்கு ஆஸ்திரேலியா, இந்தோனேசியா தான் முக்கிய நிலக்கரி இறக்குமதியாளர்களாக உள்ளது. 

இதற்கிடையில் கோல் இந்தியா நடத்திய ஏலத்திலும் நிலக்கரியின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. கோல் இந்தியா நிர்ணயித்த அடிப்படை விலையை விட பிப்ரவரி 2022 ல் இதுவரை இல்லாத அளவில் 270 சதவிகிதம் நிலக்கரி விலை அதிகரித்துள்ளது. 

அனல் மின் நிலையங்கள் அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் மின் உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. இது இறுதியில் நுகர்வோருக்கு விலையை அதிகரிக்கத் தூண்டும். இதுபோன்று தொடர்ந்து, நிலக்கரியின் விலையானது அதிகரித்து வரும் நிலையில், மின்சாரம், ஸ்டீல், அலுமினியம், சிமெண்ட் உற்பத்தியாளர்களுக்கும் நிலக்கரி குறைவாகவே வழங்கப்படலாம். இதனால் பொருட்களின் விலை பண்மடங்கு அதிகரிக்கலாம். இது மற்ற துறைகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இப்பிரச்சனை சர்வதேச சந்தையிலும், உள்நாட்டுச் சந்தையிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 

;