புதுதில்லி:
கடந்த 2019 அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரையில் மானிய விலையில் வழங்கப்படும் சமையல் சிலிண்டரின் விலை ரூ. 35 ரூபாய் 55 காசுகள் வரை உயர்ந்துள்ளதாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார். 2019 அக்டோபர் 1 அன்று மானியசிலிண்டர் ஒன்றின் விலைதில்லியில் ரூ. 538 ரூபாய்95 காசுகளாக இருந்தது.அதன் விலை தற்போதுரூ. 574 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.