சமையல் எரிவாயு விநியோகிக்கும் போது கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கில் பதிலளிக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீடுகளில் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும்போது, டெலிவரிக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கக்கோரி மருத்துவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் எரிவாயு விநியோகிக்கும் போது வீட்டுக்கு தகுந்தாற்போல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என குறிப்பிட்டார். மேலும் இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று, வழக்கானது உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனடிப்படையில் மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 1 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.