tamilnadu

img

ஹெலிகாப்டர் நிறுவன சகோதரர்களில் கணேசன் என்பவரது மனைவி அகிலாண்டத்திற்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

ஹெலிகாப்டர் நிறுவன சகோதரர்களில் கணேசன் என்பவரது மனைவி அகிலாண்டத்திற்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கணேசன், சுவாமிநாதன் ஆகிய இருவரும் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என அழைக்கப் படுவார்கள். இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி கோடி கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகியுள்ள  கணேசன் மனைவி 
அகிலாண்டம் மற்றும் நிதி நிறுவன அலுவலக பணியாளர் வெங்கடேசன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு செய்தனர். இந்த வழக்கு வியாழனன்று நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. 
அப்போது அரசு தரப்பில், நிதி நிறுவன " வழக்கு  பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. என்றும் 
மேலும், அகிலாண்டம் முதல் குற்றவாளியாக உள்ள  கணேசன் என்பவரின் மனைவி.
இவர் துபாய் மலேசியா நாடுகளில்  நிறுவனங்களின்  இயக்குநராக உள்ளார். மேலும் இவர் பெயரில் மலேசியாவில், 551 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவனங்கள், உள்ளது " என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, வழக்கு தற்போது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இருந்து பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது விசாரணை வழக்கு முக்கியமான கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஜாமீன் கோரும் அகிலாண்டம்  முதல் குற்றவாளியின் மனைவியாக இருப்பது மட்டுமல்லாமல் அவரது பெயரில் வெளிநாடுகளில் உள்ள மலேசியா நிறுவனங்களில் 551  கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது மேலும் இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக நாற்பத்தி ஒரு புகார்கள் பெறப்பட்டு அந்த வழக்குகள் பதிவு செய்து அனைத்து வழக்குகளும் பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜாமீன் வழங்கினால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் எனவே அகிலாண்டம் ஜாமீன் மனுவை நிராகரித்து  நீதிபதி  உத்தரவு பிறப்பித்தார்.