economics

img

ரூ. 99 ஆயிரம் கோடியை அள்ளித்தரும் ரிசர்வ் வங்கி... மத்திய அரசுக்கு 2 மடங்கு கூடுதல் ஈவுத்தொகை...

புதுதில்லி:
மத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக 99 ஆயிரத்து 122 கோடியை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய் துள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் 589-ஆவது வாரியக் கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.நாட்டின் பொருளாதாரச் சூழல்,உலகப் பொருளாதாரச் சூழல், உள்நாட்டளவில் சந்திக்கும் பிரச்சனைகள், கொரோனா 2-ஆவது அலையால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பைத் தணிக்க ரிசர்வ் வங்கி எடுத்த நிதிக்கொள்கை முடிவுகள் குறித்து, வாரியக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்தே, ‘2021 மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த 9 மாத காலத்தில், சந்தை செயல்பாடுகள், முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் சேமிக்கப்பட்ட உபரிதொகையில், ரூ. 99 ஆயிரத்து 122 கோடியை மத்தியஅரசுக்கு ஈவுத் தொகையாக வழங்குவதென்றும் முடிவு எடுக்கப்பட்டது என்று ரிசர்வ் வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.வழக்கமாக நிதியாண்டின் துவக்கமான ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான12 மாத காலத்தையே, ரிசர்வ் வங்கி,தனது ஈவுத்தொகை கணக்கீட்டிற்காக எடுத்துக் கொள்ளும். ஆனால், இம் முறை 2020 ஜூலை முதல் 2021 மார்ச்வரையிலான 9 காலத்தை எடுத்துக் கொண்டு, மத்திய அரசுக்கு ஈவுத் தொகையை வழங்கியுள்ளது.

அவசரகால நிதியின் (Risk Buffer)அளவை, மிகக் குறைவாக 5.50 சதவிகிதமாகவே தொடர்வது என்றும் தீர்மானித்துள்ளது.மத்திய அரசு தனது 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையின் படி ரிசர்வ் வங்கியிடம் இருந்து50 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே ஈவுத்தொகையாக பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், கடந்த முழுக் கணக்கீட்டு நிதியாண்டிலேயே (ஏப்ரல் முதல்மார்ச் வரையிலான 12 மாதங்களுக்கும் சேர்த்து) ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஈவுத்தொகையாக 57 ஆயிரத்து 128 கோடி ரூபாய்தான் கிடைத்திருந்தது.ஆனால், தற்போது மத்திய அரசுஎதிர்பார்த்ததை விடவும் அதிகமாக- 99 ஆயிரத்து 122 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி அள்ளித் தந்துள்ளது.மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதலே, ரிசர்வ் வங்கியின் உபரி நிதி 9 லட்சம் கோடி ரூபாயைஅபகரிக்கும் முயற்சியில் இருந்து வருகிறது. ‘பிமல் ஜலான்’ கமிட்டிஒன்றை அமைத்து, அதன் பரிந்துரைஅடிப்படையில், 2018-2019 நிதியாண்டில் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம்கோடியைப் பெற்றது. இதனை ஏற்கமறுத்ததற்காக, அன்றைய ரிசர்வ்வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் அவராகவே வீட்டிற்கு போகும்படி செய் தது. பின்னர் சக்தி காந்த தாஸை ஆளுநராக நியமித்துக் கொண்டது. அவர் மூலம், நடப்பாண்டில், மேலும் 99 ஆயிரம் கோடியை கூடுதலாகப் பெற உள்ளது.