districts

img

பி.எஸ்.எல் நிறுவனத்தில் சம்பள பாக்கி: விரைந்து வழங்க சிஐடியு கோரிக்கை

செங்கல்பட்டு, ஜூன் 2- மதுராந்தகம் அடுத்த வையாகூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பிஎஸ்எல் நிறுவனம் தொழி லாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் எந்தவித முன்ன றிவிப்புமின்றி தொழிலா ளர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. இதனை கண்டித்தும், செங்குன்றம் தொழிற் பேட்டையில் செயல்பட்டு வரும் டீஜிங் மொப்பாட்ஸ் தொழிற்சாலையில் சட்ட விரோதமாக பணி நீக்கம்  செய்யப்பட்ட 22 தொழிலா ளர்களுக்கு மீண்டும் பணி  வழங்க வேண்டும், திருப் போரூர் அடுத்த ஆலத்தூர் தொழில்பேட்டையில் செயல்பட்டு வரும் யூரோ லைஃப் ஹெல்த்கேர் நிறு வனத்தில் மூன்று மாதத் திற்கு ஒருமுறை சம்பளம்  வழங்குவதை கைவிட்டு  மாதம்தோறும் 5 ஆம் தேதிக்  குள் சம்பளம் வழங்க வேண்டும், மூன்று ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள சட்டப்படியான போனஸ் உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கை பொது  தொழிலாளர் சங்கம் சார்பில்  இந்த  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வியாழனன்று (ஜூன் 2) செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில்  சிஐடியு மாவட்ட தலைவர்  கே.சேஷாத்திரி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில்  சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மாவட்ட செயலாளர் க.பகத்சிங் தாஸ் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் பங்கேற்ற னர்.

;