districts

img

சாலையில் பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்

செங்கல்பட்டு, அக்.20-  பால் கொள்முதல் விலையை உயர்த்த  வலியுறுத்தி பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் சாலையில் பாலைக் கொட்டி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் வட்டார  வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நடை பெற்ற இந்த போராட்டத்தில் பால் லிட்டர்  ஒன்றுக்கு ரூ.11 உயர்த்தி வழங்க வேண்டும்,  கூடுதல் கொள்முதல் நிலையங்களை அமைத்தல், கொள்முதல் கமிசன் தொகையை உயர்த்தி தர வேண்டும், மாட்டு தீவன மானியத்தை வழங்க எடுக்க  வேண்டும் எனவும், தனியார் பால் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு நடந்து கொள்ள கூடாது என வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கொண்டு வந்த பாலை சாலையில் ஊற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே வாசுதேவன்,செய்யூர் வட்டத்  தலைவர் ஜி.ராஜேந்திரன் வட்டச் செயலா ளர் எஸ்.ராஜேந்திரன், பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். ரவி  உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப்  பேசினர்.

;