districts

img

சிபிஎம் செங்கல்பட்டு மாவட்ட மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது

 செங்கல்பட்டு, ஜன.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட மாநாடு செந்தொண்டர் அணிவகுப்புடன் எழுச்சியுடன் துவங்கியது. கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட 23ஆவது  மாநாடு ஜனவரி 10, 11 ஆகிய நாட்களில் செங்கல்பட்டில் தோழர் டி.லட்சுமணன் நினைவு அரங்கத்தில் நடைபெற்றுவருகின்றது. கட்சியின் கொடியை மாவட்ட குழு உறுப்பினர் டி.கிருஷ்ணராஜ் ஏற்றினார். வரவேற்புக் குழுத் தலைவர் வி.கணபதி வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சேஷாத்திரி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் இ.சங்கர் வேலை  அறிக்கையும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ஜி.மோகனன் வரவு-செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர்.

மாநாட்டில் செங்கல்பட்டு மாவட்ட மக்களின் பிரதான கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வுள்ளது முன்னதாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில்  தோழர்  டி.லட்சுமணன் நினைவு கல்வெட்டை மாவட்டக்குழு உறுப்பினர் டி.கிருஷ்ணராஜ் திறந்து  வைத்தார்.  மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தர ராசன் நினைவு கொடியை ஏற்றிவைத்தார்.இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு பகுதிக் குழு  உறுப்பினர் என். அன்பு தலைமையில்  கொண்டுவரப்பட்ட தோழர் டி.லட்சுமணன் நினைவு ஜோதியை மாவட்ட குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன்  பெற்றுக்கொண்டார்.செய்யூர் வட்டம் குழுவின் சார்பில் செயலாளர் எஸ்.ரவி தலைமையில் கொண்டுவரப்பட்ட  மறைந்த  தோழர் ஜோதிலிங்கம் நினைவு கொடியை மாவட்டக் குழு உறுப்பினர் வி.தமிழரசி பெற்றுக் கொண்டார். காட்டாங்கொளத்தூர் பகுதி குழு சார்பில் சம்பத் தலைமையில்  கொண்டுவரப்பட்ட  தோழர்  யோவான் நினைவு ஜோதியை  மாவட்டக் குழு  உறுப்பினர் பி.மாசிலாமணி  பெற்றுக் கொண்டார்.  

மாமல்லபுரத்திலிருந்து வட்டச் செயலாளர்கள் எம்.செல்வம், எம்.குமார் ஆகியோர் தலைமை யில்  கொண்டுவரப்பட்ட   தோழர்கள் ரங்கநாதன்,  ராஜகோபால் ஆகியோரின் நினைவு ஜோதியை என்.பால்ராஜ், எஸ்.ரவி ஆகியோர்  பெற்றுக் கொண்டார். மதுராந்தகம் வட்டக் குழுவின் சார்பில் வட்டச்  செயலாளர் எஸ்.ராஜா தலைமையில் கொண்டு வரப்பட்ட மறைந்த தோழர் முனியசாமி நினைவு  ஜோதியை எஸ்.குணசேகரன் பெற்றுக் கொண்டார்.   மாநாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

;