districts

அதிமுக ஆட்சியின் அலங்கோலம்: பூதூரில் ரூ.18 லட்சம் மின் கட்டணம் பாக்கி

செங்கல்பட்டு, ஆக். 17- பூதூர் ஊராட்சியில் நிலுலையில் உள்ள மின் கட்டணம் ரூபாய் 18 லட்சம் பாக்கி இருப்பதால் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றியமைக்க  மின்சார வாரியம் மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம்  மதுராந்தகம் ஊராட்சிக்குட்பட்டது பூதூர் ஊராட்சி மன்றம். இந்த ஊராட்சிக்குட்பட்டு 7 துணை கிராமங்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியின்போது ஊராட்சி மன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர்களை சிறப்பு அலுவலர்களாக கொண்டு இயங்கிவந்தன.  பூதூர் ஊராட்சியில் சிறப்பு அலுவலர்க ளாக பணியாற்றியவர்கள் மின் கட்டணம் செலுத்தாமல் ரூ. 18 லட்சத்தை நிலுவையில் வைத்துள்ளனர். இதனால், தற்போது ஊராட்சியில் பழுதான மின்கம்பங்களை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஊராட்சி மன்றத்  தலைவர் ஏ.சி.சுரேஷ் மற்றும் கிராம பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர். அதில், சிறப்பு அலுவலர்கள் ஊராட்சி மன்றத்தை நடத்தியபோது ரூ. 18 லட்சத்தை மின் வாரியத்திற்கு கட்டாமல்  நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் தற்போது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  பழுதடைந்த மின் கம்பங்களை சீரமைக்க   ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி   மின்வாரிய இளநிலை  பொறியாளர் அலுவல கத்தில் மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் நிலுவையில் உள்ள மின் கட்டணம் ரூ.18 லட்சத்தை முழுவதுமாக செலுத்தினால்  மட்டுமே புதிதாக மின் கம்பம்  அமைத்து தர முடியும் என தெரிவிக்கின்ற னர். இதனால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து  நிலுவையில் உள்ள தொகையை கட்டி முடிக்க, மாவட்ட மற்றும் ஊராட்சி நிர்வாக  கனிமவள நிதியை கொண்டு    ஊராட்சியின் நிதி பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

;