districts

இஸ்லாமிய பெண்கள் அணிந்திருந்த ஹிஜாபை கழற்ற வலியுறுத்தி வீடியோ

வேலூர், மார்ச் 30 - இஸ்லாமிய பெண்கள் அணிந்திருந்த ஹிஜாபை கழற்ற வலியுறுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் கோட்டையில் கடந்த மார்ச்  27ஆம் தேதி வந்திருந்த இளம் பெண்களிடம் ஹிஜாபை அகற்றுமாறு தனிநபர் ஒருவர்  சட்டவிரோதமாக அவர்களின் அனுமதி யின்றி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில்  வெளியிட்டார். அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர் மற்றும் பகிர்ந்தவர்கள் என ஒரு சிறார் உட்பட 7 பேரை வேலூர் வடக்கு காவல்துறையினர் வியாழனன்று (மார்ச் 30) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை கண்காணிப் பாளர் ராஜேஷ் கண்ணன் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், பொது இடங்களில் தனிமனித உரிமைகளின் மீது பாதிப்பு  ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுத்து மிரட்டினாலும் அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இந்த வீடியோவை யாரும் பகிரக் கூடாது. அப்படி பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் வேலூர் கோட்டையில் 24 மணி  நேரமும்  காவல்துறையினர் ரோந்து பணியில்  ஈடுபடுவார்கள் என்றும், அங்கு ஒரு காவல்  உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது என்றும்  அவர் கூறினார். கோட்டைக்கு வரும் சுற்றுலா  பயணிகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப் படும். மேலும் சர்ச்சைக்குள்ளான வீடியோ அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

;