districts

img

670 மாணவர்களுக்கு விஐடி கல்வி உதவித்தொகை

வேலூர், மார்ச் 30- அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலம் விஐடியில் நடை பெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழா விஐடி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. நல்லி குழுமம்  தலைவர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி கலந்து கொண்டு 670 மாணவர்களுக்கு 40 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகையை  வழங்கினார். அப்போது வேந்தர் கோ.விசுவநாதன் பேசுகையில், கல்வியில் வட ஆற்காடு, தென்னாற்காடு, தர்மபுரி மாவட்டங்கள் மிக வும் பின்தங்கியுள்ளன. தற்போது இந்நிலை  மாறி வருகிறது. ஆனால் முழுமையாக மாற  வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் தென்கொரியா ஆகிய நாடுகள் வளர்ந்த  நாடுகளாக மாறியதற்கு காரணம் அவை கல்வியில் சிறந்து விளங்கியதுதான். ஆனால்  நாம் வளரும் நாடுகளின் பட்டியலில் தான் உள்ளோம், அதற்கு காரணம் நாம் கல்வியில் பின்தங்கியுள்ளோம். இந்தியாவில் உயர்கல்விக்கு செல்ப வர்கள் 27 விழுக்காடுதான். ஆனால் வளர்ந்த நாடுகளில் 60 முதல் 100 விழுக் காடாக உள்ளது. எனவே அனைவரும் படித்து  வாழ்வில் உயர வேண்டும். ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ள உயர் கல்வியை அனைவருக்கும் கொடுத்து அதனை மாற்றி காட்டுவோம் என்றார். இதில் ஜே.லட்சுமணன், கே.ஜவரிலால் ஜெயின், விஐடி இணை வேந்தர் பார்த்த சாரதி மல்லிக், கே.எம்.தேவராஜ்,  கே.எம்.ஜி.ராஜேந்திரன், பாலாஜி லோகநாதன், என்.பாஸ்கரன், அஞ்சு சக்திவேல் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர்.   புலவர் பதுமனார், மயிலாம்பிகை குமரகுரு, திட்ட ஒருங்கிணைப்பாளர் ப.சுந்தர் ராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

;