districts

img

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் எதிரொலி போலி அட்டைகள் மீது நடவடிக்கை எடுக்க உறுதி

வேலூர், மே 11- வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு போலிஅடையாள அட்டைகள் வழங்கியவர்கள் உரிய மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று (மே11) தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்தி றனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நம்புராசன் போராட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் கோபால. ராசேந்திரன், தலைவர் கே.கோவிந்த ராஜ், பொருளாளர் கே.வீரபாண்டியன், துணைத் தலைவர் எஸ்.டி.சங்கரி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் ப.சக்திவேல், தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் தலைவர் வி.குபேந்திரன், வாலிபர் சங்கத் தலைவர் ஆர்.சுடரொளியன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் நம்புராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் திருநாவு க்கரசு, காவல் ஆய்வாளர் கருணா கரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். அப்போது, மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் இடைத்தரகர் களாக செயல்பட்ட பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவலறிக்கை சங்கத் தலைவர்களிடம் வழங்கப் பட்டது. மேலும், இந்த புகார் குறித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்திலிருந்து தகவல் அளிப்பவர்களை சாட்சிகளாக சேர்த்து கொள்வதாகவும் தெரிவித்தார். அத்துடன் இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளருக்கு  அறிவு றுத்தினார். இதில் யார் தவறு செய்திரு ந்தாலும் நிச்சயம் தண்டனை பெற்று தருவோம் என உறுதியளித்தார். இந்த தகவலை போராட்டக் களத்திற்கு வந்த சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறி வித்து மாற்றுதிறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்ற னர்.

;